Paristamil Navigation Paristamil advert login

விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு

விளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு

18 ஆனி 2018 திங்கள் 11:32 | பார்வைகள் : 10164


 விளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன.

 
* இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள் விளக்கெண்ணெய்யை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வரலாம். சரும சுருக்கங்கள் நீங்கி புதுப் பொலிவு கிடைக்கும்.
 
* முகப்பருவால் அவதிப்படுபவர்கள் காட்டன் துணியில் விளக்கெண்ணெய்யை முக்கி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இரவில் தூங்க செல்லும் முன்பு இவ்வாறு தேய்த்துவிட்டு காலையில் எழுந்ததும் கழுவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முகப்பருவை மட்டும் போக்காமல் சருமத்தில் படியும் அழுக்குகள், இறந்த செல்களும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாக மிளிரும்.
 
* சரும வறட்சி, சூரிய கதிர்களால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணியாக செயல்படும். முகத்தில் விளக்கெண்ணெய்யை அழுத்தமாக தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் போதும்.
 
* சருமத்தில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். சரும வறட்சி உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
* பிரசவத்தின்போது வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் விளக்கெண்ணெய்யை பயன் படுத்தலாம். அதில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. அது தசைப்பகுதியை நெகிழ்வடைய செய்ய உதவும். பிரசவமான சில நாட்களிலேயே வயிற்றில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
* முகத்தில் சிவப்பு தழும்புகள் படர்ந்து அவதிப்படுபவர்களுக்கும் விளக்கெண்ணெய் நிவாரணம் தரும். இரவில் தூங்க செல்லும் முன்பாக விளக்கெண்ணெய்யை முகத்தில் தடவிவிட்டு காலையில் எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சரும செல்களும் வளர்ச்சி அடையும். முகம் பிரகாசமாக காட்சியளிக்கும். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்