பயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க
16 ஆவணி 2017 புதன் 12:48 | பார்வைகள் : 11040
சிலருக்கு வெகு தூரம் பேருந்தில் அல்லது காரில் பயணம் செய்வது ஒத்துக்கொள்ளாது. இதற்கு காரணம் அவர்கள் சிறுவயது முதலே அதிகப்பயணங்கள் செய்திருக்க மாட்டார்கள். இந்த காரணத்தால் தான்.
மேலும் வயிறு நிறைய சாப்பாடு இருக்கும் போது பேருந்தில் பயணம் செய்யும் போது வாந்தி வர ஆரம்பிக்கும். இதனை தடுக்க ஒரு எலுமிச்சை பழத்தை கையில் வைத்துக்கொண்டு செல்லவேண்டும். வாந்தி மயக்கம் ஏற்படும் போது எலுமிச்சையை வாயில் வைக்க வேண்டும். இதனால் வாந்தி மயக்கம் தடைபட்டுவிடும்.
மேலும் இந்த பிரச்சினை அடியோடு நிற்க தினசரி ஒரு நெல்லிக்கனி என தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் ஒரே அடியாக இந்த பிரச்சினை நீங்கி விடும்.