இழந்த கூந்தலை மீண்டும் பெற வழிகள்
14 ஆவணி 2017 திங்கள் 12:34 | பார்வைகள் : 10976
உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்களுக்கு தகுந்த பிராண்ட் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே வேலைக்கு போகும் பெண்களின் கூந்தல் பராமரிப்புக்காக மிகவும் அத்தியாவசியமான சில பொருட்களை பற்றி பார்ப்போம்.
* ஹேர் கன்டிஷனரை நீங்கள் ஷாம்பு பயன்படுத்தினால் முடியில் இருக்கும் எண்ணெய் பசை மட்டும் தான் போகும். ஆனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கன்டிஷனர் தேவை. தினமும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு கன்டிஷனர் பயன்படுத்தினால் மிருதுவான மற்றும் அலங்கரிக்க ஏதுவான கூந்தல் கிடைக்கும். நீங்கள் கன்டிஷனரை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் ஷாம்பு பிராண்ட் கன்டிஷனரை அல்லது உங்கள் கூந்தல் ஸ்டைல்லிஸ்ட் இடம் ஆலோசனை பெற்று தேர்ந்தெடுக்கலாம்.
* நீங்கள் நீண்ட நேரம் வேலை பார்ப்பவரா இருந்தால் கண்டிப்பாக அந்த நாள் இறுதியில் கூந்தல் கலைந்து போகும். இந்த பிரச்சினை நிறைய பெண்களிடம் உள்ளது. எனவே இதற்கு நீங்கள் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காண்பீர்கள். கொஞ்சம் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் போதும் உங்கள் கூந்தல் அதிசயிக்கும் படி அழகாக கலையாமல் இருக்கும்.
* உங்களது முகம் மற்றும் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டால் அது எண்ணெய் பசையுள்ள கூந்தலாகும். இதற்கு நீங்கள் தனியாக பராமரிப்பு செய்ய நேரம் கிடைக்காது. இதற்கு ஒரே தீர்வு வறண்ட கூந்தல் ஷாம்பு இதை நீங்கள் நேரடியாக பயன்படுத்தினால் கூந்தல் அழகாக மாறும். நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது கூட கைக்கு அடக்கமான ஷாம்பு பாட்டில் வாங்கி கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் காலநிலை மாற்றம் உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் நாளுக்கு நாள் அதிகரித்து விடும். இதை சரி செய்ய ஹேர் வாளியுமரைசரை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த வாளியுமரைசர் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கிறது. ஷாம்பு போட்ட பிறகு இதை பயன்படுத்தினால் கூந்தல் அழகாக அடர்த்தியாக காணப்படும். மேலும் இது வறண்ட சிக்கலான கூந்தலை சமாளிக்கவும் உதவுகிறது.
* உங்களது நீளமான கூந்தல் என்றால் அதை முழுமையாக பராமரிக்க நீண்ட நேரம் தேவைப்படும். ஆயில் மற்றும் ஷாம்பு அதன் வேரை சென்றடைய நீண்ட நேரம் ஆகும். எனவே இதற்கு ஹேர் மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் எளிதில் முடியின் வேருக்கு சென்று நல்ல பலனை தரும். மேலும் மூலிகை மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் அதிகமான பலனை பெறலாம்.