Paristamil Navigation Paristamil advert login

என்றும் இளமையாக வைக்கும் யோகா

என்றும் இளமையாக வைக்கும் யோகா

31 ஆடி 2017 திங்கள் 11:11 | பார்வைகள் : 10278


 யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பித்து, உங்களது இளமையின் காலம் நீடிக்கும். 

 
யோகா பயிற்சி நமக்கு தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை கொடுக்கிறது. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும். யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறைகிறது. மேலும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி. 
 
யோகா செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. தொடை, கால், தண்டுவடம் மற்றும் இடுப்பு தசைகள் வலுவடைகிறது. இடுப்பு மெலிந்து உடல் அழகிய வடிவம் பெறுகிறது. வயிற்று உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது. கழிவுகள் இலகுவாக வெளியேற யோகா பயிற்சி துணைபுரிகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது. 
 
வாயுக்கோளாறு, உடல் மந்த நிலைகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. முழங்கால், மூட்டுவலிகள் பிரச்சனைகள் தீரும். சித்தாசனம், பத்மாசனம் என்ற தியான ஆசனங்களால் மனம் ஒருநிலைப்படுகிறது. தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்கிறது. வயிற்று பகுதி உறுப்புகள், சிறுநீரக பிரச்சனைகள் தீரும். சுவாசம் சீரடைந்து புத்துணர்ச்சி அடைகிறது.
 
* முதலில் இந்த யோகாசனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.  
 
* குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.
 
* உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது.  காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளி தந்து யோகப் பயிற்சி செய்யலாம்.
 
* ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.
 
* ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.    
 
* சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.
 
* எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்