Paristamil Navigation Paristamil advert login

கூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

கூந்தல் வெடிப்பை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

7 ஆடி 2017 வெள்ளி 10:34 | பார்வைகள் : 10248


 கெமிக்கல் கலந்த ஷாம்பு போன்ற பொருட்களை அதிகமாக உபயோகித்தல், கடுமையான முறையில் தலைமுடியை சீவுவது மற்றும் ஹேர் ட்ரையர் கொண்டு ஈரமான முடியை உலர வைத்தல் இது போன்ற காரணத்தினால், முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படுகிறது.

 
முடியின் வெடிப்பைத் தடுக்க உதவும் டிப்ஸ்?
 
ஒரு வாழைப்பழத்தை மசித்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
 
* 1 முட்டையின் வெள்ளைக் கருவுடன் பால் கலந்து, தலையில் நன்கு தடவி 20 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
 
 
* பப்பாளி பழத்தை அரைத்து, அதனுடன் தயிர் சேர்த்து தலைமுடியில் தடவி 45 நிமிடம் ஊறவைத்து கழுவி வர வேண்டும்.
 
* பீரை தலைமுடியில் நன்கு தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் கழுவி வந்தால், முடியில் வெடிப்புக்கள் ஏற்படுவது தடுக்கப்படும். இம்முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்து வர வேண்டும்.
 
* ஈரமான தலைமுடியில் ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சரிசமமாக எடுத்து, அதை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்