Paristamil Navigation Paristamil advert login

இந்த டீயை குடிச்சா முகப்பரு வராது தெரியுமா?

இந்த டீயை குடிச்சா முகப்பரு  வராது தெரியுமா?

1 வைகாசி 2017 திங்கள் 10:49 | பார்வைகள் : 9888


 நாம் இதுவரை முகப்பரு வந்த பின்பு தான், அதைப் போக்க உதவும் வழிகளை முயற்சிப்போம். ஆனால் வருமுன் காப்பதே மேல் என்னும் பழமொழிக்கேற்ப, முகப்பரு வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றுவதே புத்திசாலித்தனம்.

 
இக்கட்டுரையில் முகப்பரு வராமலிருக்க உதவும் தேநீர் பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், முகப்பரு வருவதைத் தடுத்து, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
 
புதினா டீ
 
புதினா டீயில் உள்ள மருத்துவ குணங்கள், பருக்கள் வருவதற்கு ஓர் காரணமான டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆன்ட்ரோஜென்களைக் குறைத்து, பருக்கள் வராமல் தடுக்கும். எனவே உங்களுக்கு ஏற்கனவே பருக்கள் அதிகம் வருமாயின், புதினா டீயை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.
 
 
 
க்ரீன் டீ
 
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதிலும் தினமும் 2 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், முகப்பரு பிரச்சனையே இருக்காது. மேலும் க்ரீன் டீ தயாரித்து எஞ்சிய இலைகளை சருமத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து வந்தால், சருமம் இன்னும் பிரகாசமாக இருக்கும்.
 
 
 
சீமைச்சாமந்தி டீ
 
சீமைச்சாமந்தி டீயில் சாந்தப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதைக் குடித்தால், மன அழுத்தத்தால் பருக்கள் வருவது தடுக்கப்படும். மேலும் சீமைச்சாமந்தியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது பருக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும்.
 
 
 
சாப்பன் மர டீ
 
இந்த டீ கேரளாவில் மிகவும் பிரபலமானது. இந்த டீ தயாரிக்கத் தேவையான சாப்பன் மரப்பட்டையானது ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும். பிங்க் நிறத்தில் இருக்கும் இந்த டீ பருக்களைத் தடுப்பதோடு, கோடையில் உடல் சூட்டையும் குறைக்கும்.
 
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்