Paristamil Navigation Paristamil advert login

கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

கோடை காலத்தில் கூந்தலை பராமரிப்பது எப்படி?

21 சித்திரை 2017 வெள்ளி 12:07 | பார்வைகள் : 9917


 கோடை வந்து விட்டால் தலைமுடிக்கும் தலைமீது நேரே தாக்கும் வெயிலால் தலைக்கும். பிரச்சினைகள் அதிகம் இருக்கத்தான் செய்யும். ஆக தலையை பாதுகாப்பது என்பது அவசியம். 

 
* வெளியில் செல்லும் பொழுது குடை, தலையைச்சுற்றிய துணி, தொப்பி இவை சிறந்த பாதுகாப்பாக அமையும்.
 
* தலையை இறுக்க பின்னவோ. கொண்டை போடவோ செய்யாதீங்கள், லூசான முடி அதிக வியர்வை சேர்வதை தடுக்கும்.
 
* மென்மையான ஷாம்பூவால் தலையை அலசுங்கள். தலைக்கு தினமும் நீர் ஊற்றலாம். ஆனால் தினமும் ஷாம்பூ என்பது வேண்டாம்.
 
* ஈரத்தலையினை இயற்கையாய் துண்டு கொண்டு துடைத்து உலர விடுங்கள்.
 
* மிகச்சிறிதளவு சன் ஸ்கீரின் தலைக்கு கூடத்தடவலாம்.
 
* சுடு நீரை தலையில் ஊற்றாதீர்கள் சருமத்திற்காக.
 
* சற்று கூடுதலாகவே நீர் குடியுங்கள்.
 
* தர்பூஸ், எலுமிச்சை, மாதுளை இவைகளை நன்கு உபயோகியுங்கள்.
 
 
 
* ‘காய்கறி சாலட்’ மிகுந்த நன்மைதரும்.
 
* முகத்தில் பன்னீர் தடவுங்கள்.
 
* தயிர், வெள்ளரிசாறு கலந்து முகத்தில் தடவுங்கள்.
 
* எலுமிச்சை,கொத்தமல்லி, புதினா ஜூஸ் குடியுங்கள்.
 
* சிறுகுழந்தைகளை சற்று கூடுதல் கவனத்துடன் தான் கோடையில் நாம் பாதுகாக்க வேண்டும்.
 
* கொளுத்தும் வெயிலில் குழந்தையை வெளியில் எடுத்துச்செல்வதை தவிருங்கள்.
 
* தலை, உடம்பினை பருத்தி துணியில் நன்கு போர்த்தி சில நிமிடங்களில் அதனை நன்கு தளர்த்தி விடுங்கள்.
 
* பருத்தி ஆடைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
 
* இரு வேளை கூட குளிக்க வைக்கலாம்.
 
* சிறு பிரச்சினை என்றாலும் அலட்சியம் செய்யாது மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
 
* தொப்பி,குடை இவற்றினை வெளியில் செல்லும் போது பயன்படுத்துங்கள்.
 
* நீர் வற்றாமல் இருக்க வயதிற்கேற்ப எவ்வளவு நீர் கொடுக்க வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்