சரும அழகை காக்கும் இயற்கை வழிமுறைகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9134
இரத்தத்தில் ஏதேனும் குறையிருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியம். கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையில் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்லது.
* முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது. இவ்வாறு செய்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் தோன்றும். மேலும் அது வடுக்களாக மாறும்.
* முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும்.
* மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாதவாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
* இரவு நேரங்களில் அதிகளவு கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும்.
* ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
* தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உடற்பயிற்சி செய்யாதவர்கள் தியானம், யோகா, செய்வது நல்லது.
* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
* மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு முகத்தில் அதிக பருக்கள் தோன்றும். மாதவிலக்கு முடிந்தவுடன் அவை தானாக போய் விடும். அந்த காலங்களில் மென்மையான உணவுகளை உண்பது நல்லது.