கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு தொற்று - பொது மக்களுக்கு எச்சரிக்கை
8 ஆடி 2023 சனி 00:00 | பார்வைகள் : 6530
தொடர்மழை காரணமாக கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த நிலை மேலும் கூடும் அபாயம் இருப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இவ்வருடத்தில் 2,138 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக கொழும்பு நகரில் அதிகளவான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்ற நிலையில், டெங்கு பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால் அடுத்த இரு வாரங்கள் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.