Paristamil Navigation Paristamil advert login

வீதியில் கொட்டப்பட்ட 3,000 லிட்டர் இரசாயனம் - போக்குவரத்து பாதிப்பு

வீதியில் கொட்டப்பட்ட 3,000 லிட்டர் இரசாயனம் - போக்குவரத்து பாதிப்பு

6 புரட்டாசி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 13421


A10 நெடுஞ்சாலையில் பயணித்த வாகனம் ஒன்றில் இருந்து 3,000 லிட்டர்இரசாயனம் கொட்டப்பட்டதில், வீதி போக்குவத்து தடைக்குளானது. 

 

 

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் Marcoussis நகர்அருகே இடம்பெற்றது. எளிதில் தீப்பற்றக்கூடிய இரசாயனத்தை ஏற்றிச்சென்றவாகனம் ஒன்று திடீரென கட்டுபபட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வாகனத்தில்இருந்த இரசாயனம் வீதியில் கொட்டியது. மொத்தமாக 3,000 லிட்டர் இரசாயனம்கொட்டியதில் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது. 

 

உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். தீ பரவல் போன்ற எவ்விதஅசம்பாவிதங்களும் பதிவாகவில்லை. வீதி போக்குவரத்து நிறுத்தப்பட்டு, இரசாயனம் வீதியில் இருந்து அகற்றப்பட்டது. 

 

அதேவேளை, இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்