Paristamil Navigation Paristamil advert login

31 ஆண்டுகளுக்கு பின் இளையராஜாவுடன் இணையும் பாரதிராஜா !

31 ஆண்டுகளுக்கு பின் இளையராஜாவுடன்  இணையும்  பாரதிராஜா   !

6 புரட்டாசி 2023 புதன் 07:09 | பார்வைகள் : 10317


இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'மார்கழி திங்கள்' . இந்த படத்தின் மூலம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். 

புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இசை அமைக்கும் பணியில் இளையராஜாவுடன் பாரதிராஜாவும் இணைந்து கொண்டார். 

இருவரும் சேர்ந்தது 31 வருடங்களுக்கு முன்பு 'நாடோடி தென்றல்' படத்திற்காக பணியாற்றினார்கள். தற்போது 'மார்கழி திங்கள்' திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. “இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும்” என்று மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்