Paristamil Navigation Paristamil advert login

 வடகொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா 

 வடகொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா 

6 புரட்டாசி 2023 புதன் 09:14 | பார்வைகள் : 9080


உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளாக  தொடர்ந்து நீடித்து வருகிறது. 

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்பொருட்டு அவர் இம்மாதம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வடகொரியாவுக்கு வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச சமூகத்தில் இதற்கான விலையை அவர்கள் கொடுப்பார்கள் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், கிம் ஜோங் உன் வருகை தொடர்பில் அமெரிக்காவின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என ரஷ்யா பதிலளித்துள்ளது.

வடகொரிய அதிகாரிகள் தரப்பு முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுப்பார்கள் எனவும், தேவையெனில் தனியாக இரு தலைவர்களும் ஆலோசனை முன்னெடுப்பார்கள் என கூறப்படுகிறது.

மேலும், உக்ரேனியர்களைக் கொல்லும் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்ற பொது உறுதிமொழிகளுக்கு வட கொரியா கட்டுப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுப்போம் என ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்