Paristamil Navigation Paristamil advert login

நயன்தாரா 'இறைவன்' படத்தைப் புறக்கணிக்கிறாரா ?

நயன்தாரா 'இறைவன்' படத்தைப் புறக்கணிக்கிறாரா ?

6 புரட்டாசி 2023 புதன் 11:35 | பார்வைகள் : 5627


அகமது இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'இறைவன்'. செப்டம்பர் 28ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இப்படத்தின் டிரைலர் படத்தின் கதாநாயகியாக நயன்தாரா அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரவில்லை. ஆனால், அதற்கு சில தினங்களுக்கு முன்பு வெளியான 'ஜவான்' படத்தின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய டிரைலர்களை மட்டும் பகிர்ந்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் கடந்த வாரம்தான் புதிதாக கணக்கு ஆரம்பித்து தனது பதிவுகளைப் பதிவிட ஆரம்பித்தார் நயன்தாரா. முதல் இரண்டு பதிவுகள் அவருடைய குழந்தைகளை அறிமுகம் செய்த பதிவுகளாகவும், அடுத்த மூன்று பதிவுகள் 'ஜவான்' பதிவுகளாகவும் மட்டுமே இருக்கின்றன.

இத்தனைக்கும் 'இறைவன்' டிரைலர் யு டியுபில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. தற்போது தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 28 லட்சம் பாலோயர்களைப் பெற்றுள்ள நயன்தாரா, 'இறைவன்' படத்தின் டிரைலரையும் பகிர்ந்திருந்தால் அது இன்னும் கூடுதலான ரசிகர்களிடம் போய்ச் சேர வாய்ப்புள்ளது. எந்த காரணத்தினாலோ அவர் இதுவரையிலும் 'இறைவன்' படத்தின் டிரைலரைப் பகிரவே இல்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்