நான்கு நண்பர்கள்
27 ஆடி 2023 வியாழன் 09:41 | பார்வைகள் : 6915
ஒரு அடர்ந்த காட்டு பகுதியில நான்கு நண்பர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க
ஒரு காக்கா ,ஒரு எலி ,ஒரு மான் ,ஒரு ஆமை இப்படி நாலு பேரும் நண்பர்களா இருந்தாங்க
அவுங்க எப்பவும் காட்டு பகுதியில சுதந்திரமா பேசி பொழுத கழிச்சிகிட்டு இருப்பாங்க
ஒருநாள் அந்த பகுதிக்கு ஒரு வேட்டை காரன் வர்றத பாத்துச்சு மான்
உடனே தன்னோட நண்பர்கள் கிட்ட உடனே எல்லாரும் ஒளிஞ்சிக்க சொல்லி சொல்லுச்சு
பதறிப்போன ஆமை நண்பர்களே என்னால உங்கள போல வேகமா ஓட முடியாதுனு சொல்லி வருத்தப்பட்டுச்சு
அப்ப அந்த எலி சொல்லுச்சு ,நண்பரே பதறவோ பயப்படவோ வேணாம் ,பதறாத காரியம் சிதறாது அதனால பொறுமையா இருக்க சொல்லிட்டு ஒரு ஓட்டைகுள்ள போய் ஒளிஞ்சிகிட்டு நடக்கிறத பார்த்துச்சு
அதே நேரத்துல அந்த காக்கா உயரமான இடத்துக்கு போய் உக்காந்து என்ன நடக்குதுன்னு பாத்துச்சு ,மான் பக்கத்துல இருக்குற ஒரு புதர்ல ஒளிஞ்சிகிடுச்சு
அங்க வந்த வேட்டைக்காரன் அந்த ஆமைய எடுத்து ஒரு பைக்குள்ள போட்டு நடக்க ஆரம்பிச்சான்
இத பார்த்த மத்த மூணு நண்பர்களும் ஒரு திட்டம் போட்டாங்க ,அதுபடி காக்கா உயர பறந்து அந்த வேட்டைக்காரன் போகுற பாதைய சொல்லுச்சு
உடனே மான் அந்த வேட்டைக்காரன் போகுற வழிக்கு வேற பாதை வழியா வந்து செத்து கிடக்குற மாதிரி படுத்துச்சு
அத பார்த்த அந்த வேட்டைகாரன் அந்த பைய அங்கேயே போட்டுட்டு அந்த மானை தூக்க போனான்
அப்ப அங்க வந்த எலி அந்த பைய ஓட்ட போட்டு ஆமைய தப்பிக்க வச்சுச்சு
இத பார்த்த காக்கா மானுக்கு தப்பிக்க சொல்லி கத்துச்சு ,உடனே மானும் வேகமா ஓடி போயி தப்பிச்சிடுச்சு
அந்த வேட்டைக்காரன் ஏமாந்து போனான் ,அப்புறமா அந்த நான்கு நண்பர்களும் தங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க ,பதறாத காரியம் சிதறாதுனு நம்ம பெரியவங்க சொன்னது எவ்வளவு உண்மையா போச்சுன்னு பேசிக்கிட்டாங்க