ஜார்ஜ் வாஷிங்டன்– உதவி
24 ஆடி 2023 திங்கள் 06:02 | பார்வைகள் : 7068
அமெரிக்கால ஒரு வளர்ந்து வரும் நகரம் இருந்துச்சு
அங்க இருக்குற தொழிலாளிங்க எல்லாரும் மிகுந்த உழைப்பை கொடுத்து வேலை பாத்துகிட்டு வந்தாங்க
ஒருநாள் ஒரு உழைப்பாளர் கூட்டம் மிக சிரமத்தோடு ஒரு பெரிய மர துண்ட தூக்கி நிறுத்த முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க
மரத்தோட எடை அதிகமா இருந்ததால அவுங்களால அத தூக்க முடியல ,ஆனா அவுங்கள வேலை வாங்குறதுக்கு கூடவே இருந்த அதிகாரி அவுங்கள திட்டிகிட்டே இருந்தான்
ஆனா அந்த அதிகாரி ஒரு கை கொடுத்து உதவி செஞ்சா ஒரே நொடியில அந்த வேலைய செஞ்சு முடிச்சிடலாம்
அப்ப குதரைல அங்க ஒருத்தர் வந்தாரு ,நீங்க ஒரு நல்ல அதிகாரினா அவுங்களுக்கு உதவி செய்யலாம இப்படி கத்தி கூச்சல் போட மாட்டிங்கனு சொன்னாரு
உடனே அந்த அதிகாரி ரொம்ப கோப பட்டாரு ,நான் ஒரு அதிகாரி ,தொழிலாளி இல்லனு சொன்னாரு
உடனே அந்த குதிரைல இருந்த மனிதன் இறங்கி அந்த தொழிலாளிகளுக்கு உதவி செஞ்சாரு
திரும்ப அந்த அதிகரிக்கிட்ட வந்து அவுங்களுக்கு இதே மாதிரி ஏதாவது உதவி தேவைப்பட்டா என்ன கூபிடுங்கனு சொன்னாரு
நீங்க யாருனு அப்பத்தான் கேட்டாரு அந்த அதிகாரி ,அதுக்கு அவரு சொன்னாரு நான்தான் தளபதி ஜார்ஜ் வாஷிங்டன்னு
அத கேட்ட அந்த அதிகாரி ரொம்ப பயந்து போய்ட்டாரு ,உடனே அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாரு
ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் மிக முக்கியமான அதிபரா பின்னாளில் பதவி வகித்தார்