ராட்சச பீட்ரூட் - ஒற்றுமையே பலம்
2 சித்திரை 2023 ஞாயிறு 09:36 | பார்வைகள் : 9059
ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரு தன்னோட தோட்டத்துல பீட்ரூட் விளைச்சல் செஞ்சாரு. ஒரு நாள் அவர் பயிர் செஞ்ச எல்லா பீட்ரூட்டும் நல்லா விளைஞ்சிருக்குறத பாத்துகிட்டே போனப்ப. ஒரு பீட்ரூட் மட்டும் ரொம்ப பெருசா வளந்திருக்குறத பாத்தாரு.
அடடா இந்த பீட்ரூட்ட மட்டும் நாம சந்தைக்கு கொண்டு போயி வித்தா நிறைய பணம் கிடைக்கும்னு சொல்லிட்டு அத பிடுங்க பாத்தாரு.
ஆனா அந்த பீட்ரூட் பிடுங்க வரல ,ஒடனே ஒரு பெரிய கயிற கட்டி அந்த பீட்ரூட்ட பிடுங்க பாத்தாரு. அப்பாவும் அது பிடுங்க வரல ,உடனே அவரோட மனைவிய கூப்பிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து பீட்ரூட்ட பிடுங்க பாத்தாங்க ,அப்பவும் அத பீட்ரூட் பிடுங்க வரல.
உடனே அவரோட மகனையும் சேர்த்துக்கிட்டு பீட்ரூட்ட பிடுங்க பாத்தாங்க ,அப்பவும் அத பீட்ரூட் பிடுங்க வரல. உடனே அவரோட மகளையும் கூப்பிட்டு சேர்த்துக்கிட்டு பீட்ரூட்ட பிடுங்க பாத்தாங்க ,அப்பவும் அத பீட்ரூட் பிடுங்க வரல.
இவுங்க கஷ்டப்படுறத பார்த்த அவுங்க தோட்டத்து நாய் அதுவும் வந்து உதவி செஞ்சது அப்பவும் அந்த பீட்ரூட் பிடுங்க வரல. அங்க இருந்த பூனையும் சேர்ந்துக்கிட்டு அவுங்களுக்கு உதவி செஞ்சது அப்பத்தான் அந்த பீட்ரூட் வெளியில வந்துச்சு.
உடனே அந்த பூனை மேல பிரியமா இருந்த அந்த வீட்டு பொண்ணு சொன்னா பாத்திங்களா உங்க யாராலயும் முடியாததை என் செல்ல குட்டி வந்ததும் செஞ்சிட்டிங்கனு சொன்னா
அதுக்கு தங்களுக்கு உதவின நாய்க்குட்டி மேல பிரியமா இருந்த அந்த வீட்டு பையன் சொன்னான் இல்லை இல்லை பலசாலியான இந்த நாய்க்குட்டி உதவுனதால தான் நம்மளால இந்த பீட்ரூட்ட பிடுங்க முடிஞ்சதுனு சொன்னான்.
அதுக்கு அந்த விவசாயி சொன்னாரு யாரோட முயற்சியாலயும் இந்த பீட்ரூட் பிடுங்க வரல ,நம்ம எல்லோரோட ஒற்றுமையால தான் பிடுங்க வந்துச்சு.
குழந்தைகளா நீங்க இதேமாதிரி ஒற்றுமையா எல்லா விஷயங்களையும் செஞ்சீங்கனா ஒங்களுக்கு ரொம்ப நல்லதுன்னு சொன்னாரு.