கால் தொடைக்கு வலிமை தரும் பயிற்சி
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9702
சிலருக்கு கால் மற்றும் தொடை பகுதிகளில் அதிகளவு சதை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நடக்க போது அவதிப்படுவார்கள். மேலும் ஒரு சில உடைகள் அவர்களுக்கு பொருத்தமாக இருக்காது. இவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய சில எளிய உடற்பயிற்சிகள் உள்ளன.
அதில் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. இந்த பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது கையை தோள்பட்டை வரை நேராக நீட்டவும். இடது காலை மூட்டி வரை மேலே தூக்கவும்.
இடது கையை மடக்கி தலையின் பின்புறம் வைக்கவும். இப்போது இடது கால் முட்டியால் இடது கை முட்டியை(படத்தில் உள்ளபடி) தொட வேண்டும். இவ்வாறு செய்யும் போது உடலை வளைக்க கூடாது. காலையும், கையையும் மட்டுமே வளைக்க வேண்டும்.
ஒரு பக்கம் செய்த பின்னர் 2 விநாடிகள் ஓய்வு எடுத்து மறுபக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறையும் பின்னர் படிப்பபடியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும். காலில் அதிக சதை இருப்பர்கள் அதிக எண்ணிக்கையில் செய்ய வேண்டும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய மிகவும் கடினமாக இருக்கும். கால்களில் வலி இருக்கும். ஆனால் பயிற்சியை கைவிடாமல் தினமும் செய்து வந்தால் விரைவில் கால் தொடைபகுதியில் உள்ள அதிகப்படியாக சதை குறைந்து அழகான வடிவம் பெறுவதை காணலாம். இந்த பயிற்சி கைகளுக்கும் நல்ல வலிமை தரக்கூடியது.