Paristamil Navigation Paristamil advert login

கொண்டாட்டமும் திண்டாட்டமும்.

கொண்டாட்டமும் திண்டாட்டமும்.

27 சித்திரை 2022 புதன் 17:00 | பார்வைகள் : 14159


வெள்ளை முயலுக்கு தன்னோட கண்களை நம்ப முடியலெ..
 
பச்சைப்பட்டை விரிச்சமாதிரி புல்லு வளர்ந்திருக்கு. ஒரு மாசத்துக்கான தீனியாச்சு. இந்த முதுமலைக்காட்டிலெ இப்படியொரு எடம் இருக்கறது யாருக்குத் தெரியல போருக்கே...
 
வெள்ளை முயலுக்கு ஒரே குஷியாப்போச்சு, அது அந்தப் புல் மெத்தயிலெ கும்மாளம் போடத் தொடங்கிச்சு. உருண்டுது, பொரண்டுது. எம்பி எம்பிக் குதிச்சது. கொஞ்சம் புல்லைக் கடிச்சு தின்னுச்சு. மறுபடியும் கும்மாளம் போடத் தொடங்கிச்சு.
 
ஒரு முறை அப்படிக் குதிச்சப்போ ஒரு புல்லோட நுனி அதோடு கால்ல குத்திரிச்சு. அதுவும் நல்லா குத்தயிருச்சு. நல்ல வலிச்சிருச்சு. அது கால பாத்தது. ஐயோ கால்ல ரத்தம் வந்திருச்சே..
 
என் கால்லெ ரத்தம் வர்றதுக்கு இந்தப் புல்லுதான் காரணம் இத சும்மா விடக்கூடாது. என்ன குத்தியிட்டல்ல . உன்ன என்ன செய்யப்போறேன்னு பார். அப்படீண்ணுட்டு நேரா தீ கிட்டெ போச்சு.
 
"தீயே தீயே நா வௌயாடும்போது என் காலக் குத்தின புல்லை எரிச்சிடு... " அப்படீண்ணு கேட்டுச்சு.
 
"நீ என்ன செய்தேண்ணு மொதல்லு சொல்லு" அப்படீண்ணு கேட்டுச்சு தீ. வெள்ள முயலு நடந்ததெ சொல்லுச்சு.
 
"எம்பி எம்பிக் குதிச்சு புல்லு மேல விழுந்தா புல்லு குத்தாம என்ன செய்யும். தப்பு பண்ணினவன் நீதான். அதனலெ நான் புல்லெ எரிக்கமாட்டேன்" அப்படீண்ணு சொல்லுச்சு தீ.
 
வெள்ள முயலுக்குத் தீமேல கோபம் கோபமா வந்துச்சு. உன்ன என்ன செய்யறேன் பார் அப்படீண்ணுட்டு தண்ணிகிட்டே போச்சு.
 
"தண்ணி தண்ணி நா வௌயாடும்போது என் காலக் குத்தின புல்ல எரிக்காத தீயை அணைச்சுடு" அப்படீண்ணு கேட்டுச்சு.
 
"என்ன நடந்துச்சு வெவரமாச் சொல்லுண்ணு" கேட்டுச்சு தண்ணி மொயலு நடந்தத சொல்லுச்சு.
 
"அப்ப நீதான் தப்புப்பண்ணினவன். புல்லு மேலே எம்பிக் குதிச்சதனாலே புல்லு காலெ குத்திச்சு. பாவம் புல்ல ஏன் எரிக்கணும். அப்படி எரிக்காததுக்கு தீயை நான் ஏன் அணைக்கணும் "அப்படிண்ணு சொல்லி திருப்பி அனுப்பீருச்சு தண்ணி.
 
முயலுக்குத் தண்ணி மேலெயும் கோபம் வந்துச்சு. அது நேரா யாருகிட்ட போயிருக்கும்ணு நெனக்கிறீங்க.. மண்வெட்டி கிட்டே போச்சு.
 
"மண்வெட்டி மண்வெட்டி. நா வௌயாடும்போது என் கால்ல குத்தின புல்ஏரிக்காத தீயை அணைக்காத தண்ணீரெ வெட்டிவிடு" அப்படீண்ணு கேட்டுச்சு.
 
மண்வெட்டியும் என்ன நடத்துச்சுண்ணு கேட்டுச்சு.
 
புல்லெ வௌயாடினதும், கால்லெ புல்லு குத்தினதும், புல்ல எரிக்கச் சொல்லித் தீ கிட்ட போனதும். தீ மாட்டேண்ணு சொன்னதும். தீ அணைக்கச் சொல்லி தண்ணிகிட்ட போனது வரைக்கும் மொயலு சொல்லிச்சு.
 
அதயெல்லாம் கேட்ட மண்வெட்¥டி தீயும் தண்ணியும் சொன்னதுதான் சரி. அததான் நானும் சொல்லப் போறேன். நா தண்ணியெ வெட்டிவிட மாட்டேண்ணு மண்வெட்டி சொல்லிச்சு.
மொயலுக்குக் கோபமோ கோபம். இரு உன்ன ஒரு வழி பண்றேண்ணு சொல்லி நேரா கொல்லர் கிட்டே போச்சு.
 
"கொல்லரே கொல்லரே... நான வௌயாடும் போது என் கால்லெ குத்தின புல்ல எரிக்காத தீயை அணைக்காத தண்ணியெ வெட்டிவிடாதா மண்வெட்டியோட வாயை மழுங்கடிச்சிருங்க" அப்படீண்ணு கேட்டுச்சு.
 
கொல்லரும் என்ன நடத்துச்சுண்ணு கேட்டாரு
 
மொயலும் நடந்ததையெல்லாம் சொல்லிச்சு.
 
அதயெல்லாம் கேட்ட கொல்லரும் "ஆமா அவங்க சொல்றதுதான் சரி. நான் மண்வெட்டியோட வாயை மழுங்கடிக்க மாட்டேன்ணாரு.
 
வெள்ள முயலுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இப்ப அது யாருக்கிட்ட போயிருக்கும்னு யோசிங்க. அப்படி போனா அவருகிட்ட எப்படி சொல்லியிருக்குணும் நீங்களும் சொல்லிப் பாருங்க. சரியா?
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்