வாசம் வீசும் வாடாமலர்கள்...!!
27 கார்த்திகை 2021 சனி 09:20 | பார்வைகள் : 11157
பூக்கள் பூத்தாச்சுண்ணா வசந்தகாலம் வந்தாச்சுண்ணு தெரிஞசுக்கலாம். பூமியை பூக்கள் அழகுபடுத்தறமாதிரி வேறு யாராலும் முடியாது.
எத்தனை எத்தனை வண்ணங்கள், எத்தனை எத்தனை வடிவங்கள்...!
அனைத்தையும் கண்டு ரசிக்க கண்கள் ஆயிரம் வேண்டும். பார்க்கப் பார்க்க கண் குளிரும்; மனம் மகிழும். அழகு மலர்களை விரும்பாதவங்க இந்தப் பூமியில் இருப்பாங்களா...! யாருமே இருக்க மாட்டாங்க.
ஓர் ஊரிலுள்ள எல்லா விதமான பூக்களும் ஒரே இடத்தில ஒண்ணா இருந்தா எப்படி இருக்கும்? அத்தனை அழகும் ஓர் இடத்தில் கொட்டிக் கிடக்கும். ஆகா நெனச்சுப் பாக்கவே நல்லாயிருக்குல்ல.
ஊரிலுள்ள எல்லாப் பூக்களும் ஒரே இட்த்திலெ எப்படி இருக்கும். அப்படி நடக்கவே நடக்காதுண்ணு நெனக்கிறீங்களா. இல்ல. அப்படி நடக்குகம். சில நாட்கள்ல அப்படி நடக்கும். எங்க தெரியுமா ஊட்டிலே... ஊட்டி மலர்க்கண்காட்சியில் ஊரிலுள்ள எல்லா பூக்களையும் பார்க்கலாமே.
நீலகிரி மலையோட கிரீடம் மாதிரி இருக்கும் ஊட்டியில ஆண்டுக்கொரு முறை மலர்க்கண்காட்சி நடக்கும்.
பூக்களை விரும்பறவங்க, வீட்டில் பூக்களை வளர்ப்பவங்க, பூ வேளாண்மை செய்யறவங்க... என அத்தனை பேரும் ஊட்டியில் குவிஞ்சுடுவாங்க..வீட்டில வளக்கற பூச்சட்டிகளயெல்லாம் வண்டி வாகனங்களில ஏத்தி அவங்கவங்களுக்குண்ணு ஒதுக்கியிருக்கிற இடங்களில இறக்கி வைப்பாங்க. பாக்க வர்றவங்கள இன்னும் ஆசையாசையா பாக்க வக்கிற மாதிரி அழகாக, அலங்காரமா அடுக்கி வைப்பங்க. அப்படி அடுக்கி வைக்கும்போது நம்ம வேலியிலுள்ள, நாம அதிகமாக கவனிக்காத சாதாரண பூக்களும் ரொம்ப அழகானதாக நமக்குத் தோணும். ஒவ்வொண்ணும் இருக்க வேண்டிய இடத்திலெ இருக்கும்போதுதான் அததுக்கு அழகுண்ணு சொல்றது சரிதான் இல்லயா?
இப்படி அடுக்கி வக்கறதல போட்டி வேற நடக்கும். போட்டிலெ ஜயிச்சா அவங்க படம் பேப்பரிலெல்லாம் வரும். பெரிய பெரிய ஆளுகெல்லாம் வந்து பரிசு கொடுப்பாங்க, கேடயம் பணப்பரிசும் கொடுப்பாங்க.
கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்திலிருந்து பேராசிரியர்கள் வருவாங்க.. அவங்க பூக்கள அடுக்கி வச்சிருக்கிற ஒவ்வொருத்தருகிட்டயேயும் போவாங்க எத்தன வகையான பூக்கள் இருக்கு. பூக்களை எப்படி அடுக்கி வச்சிருக்காங்க. பூக்கள் வாடமா மலர்ச்சியா இருக்கா? நல்ல வாசம் வீசும் பூக்கள் இருக்கா? யாருகிட்டயும் இல்லாத பூக்கள் இருக்கா அப்படியெல்லாம் கவனிச்சு மார்க்கு போடுவாங்க. மட்டுமல்ல பூக்களை வளக்கறதப் பற்றிச் சந்தேகங்கள் கேட்டாப் பதில் சொல்லுவாங்க.
ஒரு தடவை ஊட்டியிலெ மலர்க்கண்காட்சி நடந்தது. ஊட்டிக்கு அருகேயுள்ள குன்னூரிலிருந்து பச்சையப்பனும் தன் செடிகளுடன் ஊட்டிக்கு வந்திருந்தாரு.. மலர்களை அடுக்கி வச்சாரு. பேராசிரியர்கள் வந்தார்கள். எல்லோருடைய மலர்களையும் பார்த்துவிட்டு கடைசியா பச்சையப்பனோட மலர்களைப் பார்க்க வந்தாங்க.
மலர்களைப் பார்த்தாங்க; அப்படியே மலைச்சுப் போய் நின்னாங்க பூக்களைப் பார்த்தாங்க.; பூரிச்சுப் போனாங்க
"நண்பரே... நாங்க பல வருஷமா வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கற இந்த வேலையைச் செய்றோம். ஒவ்வொரு வருடமும் ரொம்ப சிரமப்பட்டுதான் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்போம். ஆனால் இந்த இண்டு எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. உங்களுக்குத்தான் முதல் பரிசு" அப்படீண்ணு சொன்னாங்க.,
"உங்கள் பூக்கள் மத்தவங்க பூக்களை விட பெரிசா இருக்குது. மத்தவங்க பூக்களெல்லாம் இடம் மாறனதாலெயும். போதுமான தண்ணீர் கிடைக்காததாலெயும் கொஞ்சம் வாடிப்போயிருக்கு.. ஆனால் உங்க பூக்கள் மட்டும் இப்போ பூத்த பூ மாதிரி புத்துணர்ச்சியோடு இருக்கு. உங்க பூக்களிலிருந்து வீசற வாசம் மனச மயக்குது நீங்கள் பூக்களை எப்படி வளர்க்கிறீங்க?'' வேளாண்பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மூணு பேரும் ஆச்சரியமாக் கேட்டாங்க.
"நான் என் பூச்செடிகளுக்கு இயற்கை ஒரம் போடறேன்.... '' பச்சையப்பன் பெருமையோடு சொன்னாரு
"உங்களைப் போலவே நெறையப் பேரு இயற்கை உரங்களைப் பயன்படுத்துறாங்க. அப்ப காரணம் அதல்ல. வேறு எதோ இருக்குது. யாரும் செய்யாத ஒண்ண நீங்க செய்றீங்க. அது என்ன?'' பேராசிரியர்கள் துருவித் துருவிக் கேட்டங்க.
"யாரும் செய்யாத ஒண்ண நான் செய்கிறேனா? அது என்ன?'' பச்சையப்பன் தனக்குத்தானே பேசியபடி யோசித்தாரு. பிறகு சட்டென... "ஓ அதுவா வேற யாரும் செய்யாத ஒரு வேலையை நான் செய்வேன். நான் நாளும் எம் பூக்கள்கிட்ட பேசுவேன்" அப்படீண்ணாரு.
வேளாண்பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு ஆச்சரியமாப் போச்சு. செடிகள்கூடப் பேசற ஒருத்தரை அப்பத்தான் அவங்க மொதல் தடவையாப் பாக்கறாங்க...
நீங்கள் வீட்டிலே பூந்தோட்டம் வச்சிருக்கீங்களா? நீங்க செடிக கிட்டப் பேசுவீங்களா... சும்மா பேசித்தான் பாருங்களே...