Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய சேனல் 4 காணொளி - கார்தினலின் அறிக்கை

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய சேனல் 4 காணொளி - கார்தினலின் அறிக்கை

6 புரட்டாசி 2023 புதன் 14:47 | பார்வைகள் : 3844


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அறிக்கை நிகழ்ச்சி தொடர்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (செப்.6) விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார்.

சம்பந்தப்பட்ட அறிக்கை வேலைத்திட்டத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அனைத்து பிரஜைகளையும் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மற்றுமொரு குழு நடுநிலையாகவும் நேர்மையாகவும் மேற்கொள்ளும் என தாம் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பாராளுமன்றக் குழுவை நியமிப்பதன் மூலம் மக்களின் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பதாகவும் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் கருதுவதால் இந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவினால் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வெளியிடப்படாத சில உண்மைகளை அவர்கள் அறிந்தால், அவர்கள் “தைரியமாக” அவற்றை வெளிப்படுத்தி, “உண்மைக்கு சாட்சியாக” முன்வருவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய அச்சிடப்பட்ட அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்