லசந்தவை கொலை செய்ய கோட்டாபய போட்ட திட்டம் - சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
6 புரட்டாசி 2023 புதன் 15:04 | பார்வைகள் : 11878
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்யவேண்டும் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார் என தெரியவந்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா சனல் 4 க்கு இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை நாய் என கோட்டாபய தெரிவித்துள்ளார்.
மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் லசந்த விக்கிரமதுங்க செய்திகளை வெளியிட்டமை கோட்டாபய ராஜபக்சவை கடும் சீற்றத்திற்குள்ளாக்கியது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளர் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
பிள்ளையானையும் என்னையும் அவசர சந்திப்பிற்கு அழைத்த கோட்டாபாய ராஜபக்ச லசந்தவிக்கிரமதுங்க கொலை செய்யப்பவேண்டும் என தெரிவித்தார் என சனல் 4 க்கு ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
நாங்கள் கோட்டபாயவை அவரது அறையில் சந்தித்தோம் அவரது மேசையில் சண்டே லீடர் காணப்பட்டது, என குறிப்பிட்டுள்ள ஆசாத் மௌலானா கோட்டாபய ராஜபக்ச லசந்த விக்கிரமதுங்கவை பல்லா நாய் என குறிப்பிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாய் எப்போதும் என்னுடன் மோதுகின்றது இந்த நாயை கொலை செய்யவேண்டும் உங்களால் முடிந்தளவு வேகமாக அதனை செய்யுங்கள் என கோட்டாபய தெரிவித்தார் எனவும் மௌலானா தெரிவித்துள்ளார்.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Coupons
Annuaire
Scan