பரிஸ் -பெர்லின் : இரவு நேர தொடருந்து - ஒன்பது ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சேவைக்கு
6 புரட்டாசி 2023 புதன் 17:15 | பார்வைகள் : 20753
பரிசில் இருந்து ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு இரவு நேர தொடருந்து ஒன்பது ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இயக்கப்பட உள்ளது.
பரிசில் இருந்து Strasbourg நகர் ஊடாக பெர்லினுக்கு இந்த தொடருந்து இவ்வருடத்தின் டிசம்பர் 11 ஆம் திகதியில் இருந்து இயக்கப்பட உள்ளது.
ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ÖBB எனும் நிறுவனம் இந்த சேவையினை இயக்க உள்ளது.
முன்னதாக இரவு நேர தொடருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், 9 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சேவைகள் இயக்கப்பட உள்ளன.


























Bons Plans
Annuaire
Scan