Paristamil Navigation Paristamil advert login

இங்கிலாந்து மன்னர் Charles III பிரான்ஸ் வருகை .

இங்கிலாந்து மன்னர் Charles III பிரான்ஸ் வருகை .

6 புரட்டாசி 2023 புதன் 17:32 | பார்வைகள் : 5756


இங்கிலாந்தின் மகாராணி Élisabeth II அவர்களின் மறைவுக்கு பின்னர் மன்னராக முடிசூட்டிக் கொண்ட மன்னர் Charles III இம்மாதம் 20ம் திகதி முதல் 22ம் திகதி வரை பிரான்சுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இளவரசராக இருந்த காலத்தில் பல தடவைகள் பிரான்சுக்கு வருகைதந்த மன்னர் Charles III, மன்னராக முடிசூட்டிய பின்னர் இங்கு வருகைதருவது இதுவே முதல் தடவையாகும். 

மன்னராக முடிசூட்டிய கையோடு தன் தாயாரைப் போல் (1957) முதல் வெளிநாட்டு பயணமாக பிரான்சுக்கு வருகைதர, கடந்த மார்ச் 26ம் திகதி முதல் 29ம் திகதிகளில் இங்கிலாந்து மன்னர் திட்டமிட்டு இருந்தார். ஆனால் பிரான்சில் அந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஓய்வூதிய திருத்தச் சட்டத்துக்கு எதிரான பாரிய போராட்டங்களினால்; பாதுகாப்பு கருதி அவரின் பயணத்தை பின்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரான்ஸ் வருகைதரும் மன்னர் Charles III  அவர்களை, பிரான்ஸ் அரசத்தலைவர்  Emmanuel Macron l'Elysée மாளிகையில் வரவேற்பார் எனவும், பின்னர் இருவரும் கூட்டாக மறைந்த இராணுவ வீரர்களின் நினைவுப் பீடமான l'Arc de triompheல் மலர் வணக்கம் செய்வார்கள் எனவும்  l'Élysée மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதேவேளை மன்னருக்கான சிறப்பு விருந்து ஒன்று château de Versailles.  அரண்மனையில் வழங்கபடவுள்தாகவும், மன்னர் Charles III அவர்களும், பிரான்ஸ் அரசத்தலைவர் Emmanuel Macron அவர்களும் பூமி வெப்பமடைதல் சம்மந்தமான கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர் அரச தம்பதிகள் Bordeaux நகருக்கு செல்வுள்ளதாகவும் அங்கு பல கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிய முடிகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்