பூமியில் களமிறங்குகிறது சந்திராயன் -3
23 ஆவணி 2023 புதன் 10:24 | பார்வைகள் : 10961
‘சந்திரயான்-3’ விண்கலத்தின் விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்கும் நிகழ்வு இஸ்ரோ இன்று மாலை நேரலையில் ஒளிபரப்புகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த (14.08.2023) ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற ‘விக்ரம் லேண்டர்’ திட்டமிட்டபடி இன்று(23.08.2023) மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
“சந்திராயன்-3”-ன் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் காட்சி இன்று மாலை 5.20 மணி முதல் இஸ்ரோவின் இணையதளம், இஸ்ரோ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் அரசு தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த (20.08.2023)ஆம் தேதி விக்ரம் லேண்டர், நிலவை 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்த புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan