சந்திரயான் 3 விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் புகைப்படங்கள்!
11 ஆவணி 2023 வெள்ளி 11:30 | பார்வைகள் : 5534
சந்திரயான் 3 விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்க கூடிய லேண்டரில் உள்ள கேமரா மூலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் மூலம் 120 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பைதாகரஸ் பள்ளம் முதல் எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் வரை நாம் காணலாம்.
இதனிடையே, நேற்று மதியம் 1.30 மணியளவில் சந்திரயான் 3 விண்கலம் இரண்டாவது முறையாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 4,313 கி.மீ உயரத்தில் இருந்து 1,347 கி.மீ உயரமாக குறைக்கப்பட்டுள்ளது.
நிலவின் ஈர்ப்பு விசையினால் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
புகைப்படங்கள்
நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் எடுத்த ஒரு புகைப்படமானது, கடந்த ஆகஸ்ட் 6 ஆம் திகதி எடுக்கப்பட்டுள்ளது.
இது நிலவின் மேற்பரப்பில் 18,000 முதல் 10,000 கி.மீ உயரத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த துல்லியமான நிலவு புகைப்படத்தில், 120 கிலோமீட்டர் விட்டம் கொண்ட பைதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட ஓசினஸ் ப்ரோசெல்ரம், அரிஸ்டார்டிரஸ் பள்ளம், ராமன் பள்ளத்தாக்கு ஆகியவை தெரிகின்றது.
மேலும், இந்த லேண்டர் கேமராவை பெங்களூருவில் உள்ள எலக்ட்ரோ ஆப்டிக் சிஸ்டம் உருவாக்கியது.
மற்றொரு புகைப்படமானது கடந்த ஜூலை 14 ஆம் திகதி எடுக்கப்பட்டது. இந்த புகைபபடம் சந்திரயான் 3 விண்கலத்தின் முன்பகுதியில் உள்ள இமேஜிங் கேமரா மூலம் எடுக்கப்பட்டது.
இந்த இமேஜிங் கேமராவை அகமதாபாத்தில் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் உருவாக்கியுள்ளது. மேலும், பூமியின் மேற்பரப்பில் இருந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலம் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவின் மேற்பரப்பில் லேண்டெர் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது