Paristamil Navigation Paristamil advert login

நிலவை துல்லியமாக படம் பிடித்த சந்திரயான் 3 - காணொளியை பகிர்ந்த இஸ்ரோ

 நிலவை துல்லியமாக படம் பிடித்த சந்திரயான் 3 - காணொளியை பகிர்ந்த இஸ்ரோ

8 ஆவணி 2023 செவ்வாய் 11:06 | பார்வைகள் : 8789


சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
 
சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ(ISRO) கடந்த மாதம் ஜூலை 14ம் திகதி விண்ணில் ஏவியது.
 
இந்த சந்திரயான் 3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் திகதி நள்ளிரவு 12.05 மணி முதல் பூமியின் வட்டப் பாதையை நிறைவு செய்து நிலவின் வட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக பயணிக்க தொடங்கியது என்று இஸ்ரோ ஆகஸ்ட் 4ம் திகதி தெரிவித்தது.
 
மேலும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் சந்திரயான் 3(Chandrayaan3) விண்கலத்தை திட்டமிடப்பட்ட வட்டப்பாதையில் நீட்டிக்க வைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
 
இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் திகதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையில் செருகப்பட்ட போது எடுத்த புகைப்படங்களை காணொளியாக இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
 
இதில் நிலவின் மேற்பரப்பு மிகவும் தெளிவாக தெரிவதை பார்க்க முடிகிறது, சுமார் ரூ. 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 23ம் திகதி நிலவில் மெதுவாக தரையிறக்கப்பட உள்ளது.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்