Paristamil Navigation Paristamil advert login

முதன்முறையாக ரஷ்யாவிலிருந்து நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25!

முதன்முறையாக ரஷ்யாவிலிருந்து நிலவின் தென்துருவத்துக்கு செல்லும் லூனா-25!

4 ஆவணி 2023 வெள்ளி 08:37 | பார்வைகள் : 5784


ரஷ்யாவிலிருந்து முதன் முறையாக லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11-ம் திகதி ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பவுள்ளது.
 
இதன்படி, லூனா-24 என்பது சோவியத் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
 
இது கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. 
 
பின்னர் வெற்றிகரமாக நிலவில் இருந்து 176 கிராம் மண்ணுடன் அதன் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பியது.
 
இந்த நிலையில் லூனா-25 என்ற பெயரில் நிலவுக்கு மற்றொரு தானியங்கி நிலையத்தை வருகிற 11ம் திகதி ரஷ்யா சோயுஸ் 2.1 பி என்ற ராக்கெட் மூலம் அனுப்பவுள்ளது.
 
இத்திட்டம் வெற்றி பெறும்போது நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும் முதல் தானியங்கி நிலையமாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
இதன்மூலம் நிலவில் மென்மையான தரை இறக்க தொழில்நுட்பத்தை சோதனை செய்வது, நீர் உள்பட பல்வேறு வளங்களை ஆராய்வது போன்ற முக்கிய பணிகள் முன்னெடுக்க உள்ளன.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்