உலகளவில் அதிக வெப்பம் பதிவான மாதம் - நாசா அறிவிப்பு
16 ஆடி 2023 ஞாயிறு 10:08 | பார்வைகள் : 6804
நாசாவின் உலகளாவிய வெப்பநிலை பகுப்பாய்வின்படி, கடந்த ஜூன் மாதம் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான மாதமாக பதிவாகியுள்ளது.
எல் நினோ தாக்கத்தால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் வரலாற்றிலேயே உலகில் அதிக வெப்பம் பதிவான மாதம் என நாசா அறிவித்துள்ளது.
ஜூன் 2023 க்கான உலகளாவிய சராசரி வெப்பநிலை 1951 முதல் 1980 ஜூன் வரையிலான சராசரியை விட 1.07 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
மேலும், நாசா தனது அறிக்கையில் மனித நடவடிக்ககைளினாலும், குறிப்பாக கார்பனீராக்சைடு அதிகமாக வெளியிடுவதனாலும் இவ்வாறு உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.