மாய கயிறும் கழுதையும்
30 பங்குனி 2023 வியாழன் 11:19 | பார்வைகள் : 8167
ஒரு கிராமத்துல ஒரு பானை செய்றவரு வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு மண் எடுத்துட்டு வரவும் , பானைகளை சந்தைக்கு கொண்டுபோகவும் ஒரு கழுதை வச்சிருந்தாரு.தினமும் காட்டுப்பக்கம் போயி பானை செய்யிறதுக்குக்கு மண் எடுத்துட்டு வருவாரு அவரு ,
அப்படி போகுறப்ப இடைல ஒரு இடத்துல மட்டும் கொஞ்சநேரம் ஓய்வெடுத்துட்டு வருவாரு ,அப்படி அவர் ஓய்வெடுக்கும்போது அந்த கழுதையை பக்கத்துல இருக்குற மரத்துல கட்டி வச்சிட்டு படுத்து தூங்குவாரு
ஒருநாள் அவசரத்துல கழுதை கட்டுர கயிற எடுத்துட்டு போக மறந்துட்டாரு ,
அடடா கழுதைய கட்டிப்போட கையிர் இல்லையேன்னு யோசிச்ச அவரு கழுதையோட காத பிடிச்சிகிட்டே ஓய்வெடுத்தாரு ,
அது அவருக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ,அப்ப அந்தப்பக்கம் ஒரு சாமியார் வந்தாரு ,ஏன் இப்படி கழுதையோட காத பிடிச்சிக்கிட்டு படுத்திருக்கீங்கன்னு கேட்டாரு
அதுக்கு அந்த பானை செய்றவது நடந்தத சொன்னாரு ,உடனே யோசிச்ச அந்த சாமியார் நான் ஒரு மந்திர கயிறால கழுதையை காட்டுறேன்னு
சொல்லிட்டு ஒரு மந்திரம் சொல்லி கயிறு இல்லாமலே கட்டுர மாதிரி நடிச்சாரு, சாமியார் மேல அரைகுறை நம்பிக்கையோட படுத்து தூங்குனாரு பானை செய்றவரு
கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு எழுந்து பார்த்தா கழுதை அந்த இடத்துலயே இருந்துச்சு ,கயிர்ல கட்டி இருந்தா எப்படி அங்கேயே நிக்குமோ அதுமாதிரியே நின்னுச்சு கழுதை ,அடடா இந்த சாமியார் உண்மையாவே மந்திர கயிறு பயன்படுத்திதான் கட்டி இருக்காரு போலன்னு நினச்சாறு
பக்கத்துல படுத்து இருந்த சாமியாரை எழுப்பு நன்றிசொல்லிட்டு ,கயித்த அவுத்து விட சொன்னாரு,அதுக்கு சாமியார் சொன்னாரு மந்திரமும் இல்ல தந்திரமும் இல்லை ,அந்த கழுதை தான் மந்திர கயிறால கட்ட பட்டு இருக்கிறதா நம்பனும்னு நான் நடிச்சத அந்த கழுத்தை நம்பிடுச்சு வேற ஒன்னும் இல்லைனு சொன்னாரு.
இதுமாதிரிதான் நாமளும் நம்பிக்கை இண்மைங்கிற மந்திர கயித்தால கட்டப்பட்டு ஒரே இடத்துல இருக்கோம் ,இத புரிஞ்சிகிட்டு உங்க திறமைய பயன்படுத்தி வாழ்க்கைல ஜெயிக்கணும் குழந்தைகளா