Paristamil Navigation Paristamil advert login

நேர்மைக்கு கிடைச்ச பரிசு

நேர்மைக்கு கிடைச்ச பரிசு

20 தை 2023 வெள்ளி 13:03 | பார்வைகள் : 5626


சிறுவர்கள் என்றாலே கதை கேட்க ஆவலுடன் இருப்பார்கள். சில குழந்தைகள் இரவில் தூங்கும் போது வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களிடம் கதை கேட்பார்கள். சில குழந்தைகள் எப்போதும் கதை கேட்பதற்கு விரும்புவார்கள். கதைகளிலே நீதி கதை, தெனாலிராமன் கதை, விக்ரமாதித்தன் கதை, பஞ்ச தந்திரம் கதை போன்ற பல கதைகள் உள்ளன. இந்த பதிவில் சிறிய குழந்தைக்கான ஒரு குட்டி கதையை பார்ப்போம் வாங்க..!

 
இந்த அழகான குட்டி கதையின் பெயர் நேர்மைக்கு கிடைத்த பரிசு. பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஊரில் பாபுலால் என்கிற ஒரு பெயிண்டர் இருந்தார். இந்த பெயிண்டர் மிகவும் நேர்மைக்கு வித்திட்டவர். அவர் வாழ்ந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாபுலால் என்றவர் தான் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார்.
 
இவருக்கு தினமும் வருமானமானது மிகவும் குறைவாகத்தான் கிடைக்கும். நாள் முழுவதும் வேலை செய்த பின்னும் இவரால் இரண்டு ரொட்டி மட்டும்தான் சாப்பிட முடிந்தது. இவருக்கு கிடைக்கும் சிறிய சிறிய வேலைகளை கூட மற்றவர்களை ஏமாற்ற நினைக்காமல் நேர்மையாக செய்து கொடுக்கக்கூடியவர்.
 
பாபுலால் வாழ்ந்த ஊரில் ஒரு ஜமீன்தார் வசித்து வந்துள்ளார். ஒருநாள் பெயிண்டரை ஜமீன்தார் சந்தித்து உனக்கு ஒரு வேலை தரப்போகிறேன் என்று கூறினார். ஜமீன்தார் அந்த வேலையை நீ சரியாக செய்வாயா? என்று கேட்டார். அதற்கு பாபுலால் தயக்கம் இல்லாமல் நிச்சயமாக செய்கிறேன் என்று கூறினான். என்னுடைய படகிற்கு இன்றே அழகாக பெயிண்ட் அடித்து தருகிறாயா என்று கேட்டார்.
 
பெயிண்டர் முடியாது என்று கூறாமல் உங்களுக்கு நான் இன்றே பெயிண்ட் அடித்து தருகிறேன் என்று கூறினான். ஜமீன்தார் இந்த வேலையை அவருக்கு கொடுத்ததும் மனதில் பெரும் சந்தோசத்தை அடைந்தான். படகிற்கு பெயிண்ட் அடிப்பதற்கு எவ்வளவு தொகையினை நீ எதிர்பார்கிறாய் என்று ஜமீன்தார் கேட்டார். அதற்கு உடனே பெயிண்டர் படகிற்கு பெயிண்ட் அடிக்க மொத்தமாக ரூ. 1,500/- ஆகும் என்றான். நீங்கள் உங்களால் முடிந்ததை எனக்கு பார்த்து கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றான்.
 
நீ கேட்டபடியே மொத்த பணத்தினையும் கொடுக்கிறேன், ஆனால் வேலை சரியாக இருக்க வேண்டும் என்றார். கண்டிப்பாக செய்து கொடுக்கிறேன் என்றான். பெயின்டரை படகை பார்ப்பதற்கு ஜமீன்தார் அழைத்து சென்றார். பாபுலால் அவரிடம் சிறிது நேரம் கேட்டு பெயிண்ட் அடிப்பதற்கான பொருள்களை எடுக்க வீட்டிற்கு சென்றார். வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து வந்து படகிற்கு பெயிண்ட் அடிக்க தொடங்கிவிட்டார்.
 
படகில் ஒரு ஓட்டை இருப்பதை பார்த்துவிட்டார். ஓட்டையின் மேலே நாம் பெயிண்ட் அடித்தால் நீரில் படகானது மூழ்கிவிடும் என்று மனதில் நினைத்தப்படி ஓட்டையை அடைக்க திட்டமிட்டான். படகில் ஓட்டை தெரியாதபடி ஓட்டையை அடைத்துவிட்டு முழு படகிற்கும் பெயிண்ட் அடித்து முடித்துவிட்டான்.
 
ஜமீன்தாரிடம் சென்று படகில் பெயிண்ட் அடிக்கும் வேலையானது முடிந்துவிட்டது. நீங்களே ஒரு முறை உங்களுடைய படகை வந்து பார்த்துவிடுங்கள் என்றான். படகை பார்த்த ஜமீன்தார் படகு மிகவும் அற்புதமாக இருக்கிறதே என்று கூறினான். உன்னுடைய வேலைக்கான பணத்தினை நாளை காலையில் என்னிடம் வந்து பெற்றுக்கொள் என்று ஜமீன்தார் கூறியதும் சரி என்று கூறிவிட்டு சென்றான்.
 
படகிற்கு பெயிண்ட் அடித்து முடித்த மாலையிலையே ஜமீன்தாரின் மனைவியும், அவரது குழந்தைகளும் படகின் மீது ஏறி பயணம் செய்தனர். பல நாள் விடுமுறைக்கு பிறகு படகோட்டி ராமு ஜமீன்தாரிடம் வேலைக்கு சேருவதற்கு வந்தார். உங்களுடைய மனைவி, குழந்தைகள் எங்கே என்று அவரிடம் படகோட்டி கேட்டார். ஜமீன்தார் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தெளிவாக கூறியதும் அதனை கேட்ட படகோட்டி மிகவும் வருத்தம் அடைந்தான்.
 
ஜமீன்தார் நான் கூறியதைக் கேட்டு நீ ஏன் இப்படி வருத்தப்படுகிறாய் என்று கேட்டார். முதலாளி அந்த படகில் பெரிதாக ஒரு ஓட்டை ஒன்று இருக்கிறது என்று கூறினான். இதை கேட்டதும் ஜமீன்தார் மிகவும் கவலை அடைந்தான். படகில் பயணம் சென்ற ஜமீன்தாரின் குடும்பத்தினர் திரும்பி வந்தனர். அனைவரும் நல்ல படியாக இருப்பதாய் கண்ட ஜமீன்தார் மனதில் அளவற்ற சந்தோசம் அடைந்தான்.
 
மறுநாள் பெயிண்டர் பாபுலாலை அழைத்து ஜமீன்தார் பணத்தினை கொடுத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறினார். பாபுலால் அந்த பணத்தினை கையில் வாங்கி எண்ணி பார்த்ததும் மிகவும்ஆச்சரியப்பட்டான். ஏனென்றால் கூறிய பணத்தை விட ஜமீன்தார் அதிகமாக பணம் கொடுத்திருந்தார். ஜமீன்தாரிடம் நீங்கள் எனக்கு தவறாக பணம் கொடுத்துள்ளீர்கள் என்று கூறினான்.
 
ஜமீன்தார் பெயிண்டரிடம் நான் தவறாக கொடுக்கவில்லை, உன்னுடைய நேர்மையை எண்ணி பணம் கொடுத்திருக்கிறேன் என்று கூறினார். நாம் படகிற்கு மொத்தமாக 1500 தானே பேசினோம். நீங்கள் எனக்கு ரூ.6,000/- கொடுத்துள்ளீர்கள் என்று கூறினான். இது சரியான தொகை இல்லை என்று கூறினான்.
 
ஜமீன்தார் பாபுலாலிடம் நீ எனக்கு ஒரு நல்ல காரியம் செய்து இருக்கிறாய் என்று கூறினான். பெயிண்டர் ஜமீன்தாரிடம் நான் அப்படியென்ன நன்மை செய்தேன் என்று கேட்டான். படகில் இருந்த ஓட்டையை அடைத்து இருக்கிறாய். எனக்கு படகில் ஓட்டை இருந்ததே தெரியாது என்றான். நீ படகில் உள்ள ஓட்டையை அடைத்ததனால் தான் என் மனைவியும், குழந்தையும் சந்தோசமாக பயணம் செய்தார்கள்.
 
நீ மட்டும் படகில் உள்ள ஓட்டையை அடைக்காமல் விட்டிருந்தால் இந்நேரம் என் குடும்பத்தினர் நீரில் மூழ்கி உயிரை விட்டு இருப்பார்கள். நீ செய்த காரியத்தால் தான் என் மனைவியும், குழந்தையும் இப்போது உயிருடன் இருக்கிறார்கள் என்றான் ஜமீன்தார். அதனால் தான் இந்த பணத்தினை உனக்கு நான் கொடுத்துள்ளேன் என்று ஜமீன்தார் கூறினார். அதற்கு உடனே பெயிண்டர் வேறு யாரையும் வைத்து ஓட்டையை அடைந்திருந்தால் கூட இவ்வளவு பணம் ஆகியிருக்காது என்று கூறினான்.
 
ஜமீன்தார் இதற்கு மேல் நீ எதுவும் பேச வேண்டாம் என்று பெயிண்டரை பார்த்து கூறினான். நேர்மைக்கான இந்த பணம் உனக்கு வரவேண்டியதுதான் என்று கூறினான். அந்த பணத்தினை பாபுலால் வாங்கிக்கொண்டு ஜமீன்தாரிடம் உங்களுக்கு பெரிய மனசு நன்றி என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு பெரும் சந்தோசத்துடன் பாபுலால் கிளம்பிவிட்டான்.
 
இந்த கதையின் நீதி:
இந்த கதையின் மூலம் நாம் தெரிந்துக்கொண்டது எப்போதும் நம்முடைய வேலைகளை எதிர்மறையாக இல்லாமல் நேர்மையாக செய்தோம் என்றால் அதற்கேற்ற நல்ல பலன் பாபுலாலுக்கு கிடைத்த மாறி ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும். எதிலும் நேர்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே..நன்றி வணக்கம்..!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்