மாதவிடாய் வலியின் அறிகுறிகள்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 12543
மாதவிடாய் வரும்போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். இதனால் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். அது தசைப்பிடிப்பு போல இருக்கும். கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும்.
சில நேரங்களில் குத்துவது போலவும், மந்தமாகவும், வாந்தி எடுக்கும் தன்மையுடையதாகவும், எரிச்சலாகவும், அழுத்தத்துடனும் காணப்படும். மாதவிடாய் குறையக் குறைய வலியும் குறையும். சில நேரங்களில் அதிக ரத்தப்போக்கு காணப்படும்.
இதை Menorrhagia என்று சொல்வார்கள். மாதவிடாய் காலத்தில், வேறொரு நோயால் வலி வந்தால் அதை Secondary Menorrhagia என்கிறார்கள். அடி வயிற்றிலேயே, தொப்புளுக்குக் கீழே வலி காணப்படும். இந்த வலி காலுக்கும், முதுகுக்கும் பரவலாம்.
சில பெண்கள் வாந்தி எடுக்கும் உணர்வையும், வயிற்றுப்போக்கையும், தலைசுற்றலையும், மயக்க நிலையையும் உணர்வார்கள். மயங்கி விழுந்த பெண்களும் உண்டு. ஒலி, சப்தம், மனம் போன்றவற்றால் இவர்களுடைய உடல்நிலையில் மாறுபாடு ஏற்படும்.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வாலும், சினைமுட்டை உருவாகும் நிலையிலும் இது ஏற்படுகிறது. Endometriosis என்னும் நோயில் இது காணப்படும். இதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். கர்ப்பப்பை கட்டிகளிலும், சினைமுட்டை கட்டிகளிலும் இது வரலாம்.
நோயாளி கூறும் நோய் வரலாற்றை வைத்தே சாதாரண மாதவிடாய் வலியை வேறுபடுத்த முடியும். ஆயுர்வேதத்தில் அபான வாயுவின் தடையால் இந்த வலி வருகிறது என்று கூறுகிறார்கள்.