Paristamil Navigation Paristamil advert login

50,000 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கருகில் வரும் பச்சைநிற வால்நட்சத்திரம்

 50,000 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கருகில் வரும் பச்சைநிற வால்நட்சத்திரம்

31 தை 2023 செவ்வாய் 10:50 | பார்வைகள் : 6255


பிப்ரவரி 1-ஆம் தேதி பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வரும் என விஞ்ஞானிகள் கணிப்பு. 
 
விண்ணில் உள்ள பாறைகள் மற்றும் ஐஸ் கட்டிகளால் ஆன கோள வடிவிலானதுதான், வால் நட்சத்திரம். அந்த வகையில் 50,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமிக்கு அருகில் வரும் பச்சை நிற வால் நட்சத்திரம் இந்த வாரம் பூமிக்கு அருகில் வர இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 1-ஆம் தேதி இந்த வால் நட்சத்திரம் பூமிக்கு அருகில் வரும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
இந்த வால் நட்சத்திரத்தை கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இது முதலில் சிறு கோள் என்றுதான் கணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது வால் நட்சத்திரங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நட்சத்திரமானது 4.2 கோடி கிலோமீட்டர் தூரத்தில் பூமியை கடந்து செல்ல உள்ளது. இதை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும், இரவு நேரத்தில் இந்த வால் நட்சத்திரம் மிகவும் தெளிவாக பார்க்க முடியும் என்றும்,  இந்த வால் நட்சத்திரத்தால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்