பூமியை நோக்கி வரும் நாசாவின் 38 வருட பழைய செயற்கைக்கோள்..!

7 தை 2023 சனி 12:54 | பார்வைகள் : 9982
நாசாவின் 38 ஆண்டுகள் பழமையான இஆர்பிஎஸ் (ERBS) செயற்கைக்கோள் நாளை விண்ணில் இருந்து விழும் என எதிர்பார்க்கப்படுகிறது
நாசாவால் 1984 ஆம் ஆண்டு சேலஞ்சர் என்ற விண்கலத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட 38 ஆண்டுகள் பழமையான இஆர்பிஎஸ் (Earth Radiation Budget Satellite – ERBS) செயற்கைக்கோள் நாளை பூமியில் விழும் என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் பாகங்கள் மக்கள் மீது விழும் வாய்ப்பு குறைவு என நாசா கூறுகிறது.
சுமார் 5.400 பவுண்டு (2,450 கிலோ) எடையுள்ள இஆர்பிஎஸ் (ERBS) செயற்கைக்கோளின் பகுதிகளில் பெரும்பாலானவை பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் எரிந்துவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஆனால் சில துண்டுகள் மட்டும் பூமியில் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த இஆர்பிஎஸ் செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை இரவு விண்ணில் இருந்து பூமியில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஆர்பிஎஸ் செயற்கைக்கோள் ஆப்பிரிக்கா, ஆசியா மத்திய கிழக்கு மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகள் வழியே செல்லும் என் கலிஃபோர்னியாவை மையமாக கொண்ட ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1