2023ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயம் - விண்வெளியில் இருந்து வெளியான காட்சி
3 தை 2023 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 6516
ஜப்பானிய விண்வெளி வீரர் , 2023இன் முதல் சூரிய உதயத்தை விண்வெளியில் இருந்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
2023 புத்தாண்டு தொடங்கி இன்று 3வது நாளை எட்டியுள்ளது. இருப்பினும் புத்தாண்டு கொண்டாட்ட தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. புத்தாண்டு பற்றிய புது புது செய்திகள் இன்னும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் விண்வெளியில் இருந்து ஜப்பான் விண்வெளி வீரர் 2023இன் முதல் சூரிய உதயத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.
ஜப்பானிய விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா என்பவர் இந்த 2023புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை, உலகிற்கு வெளியே விண்வெளியில் இருந்து பார்த்துள்ளார். கொய்ச்சி வகாடா பூமியில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணம் செய்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சக விண்வெளி வீரர்களுடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
‘மனித வரலாற்றில் முதன்முறையாக, புத்தாண்டின் தொடக்கமும், விண்வெளியில் சூரிய உதயமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்த அதிசய தருணம்.’ என விண்வெளி வீரர் கொய்ச்சி வகாடா, சூரியன் அடிவானத்தில் இருந்து உதிக்கும் வீடியோவை பகிர்ந்து கொண்டார்.