செவ்வாய் கிரகத்தில் இருந்து கடைசி படம் – நாசா லேண்டர்
22 மார்கழி 2022 வியாழன் 12:33 | பார்வைகள் : 7668
செவ்வாய் கிரகத்தில் இருந்து நாசா லேண்டர் தனது கடைசி படமாக இது இருக்கலாம் என்று அனுப்பிய படம் வெளியானது.
செவ்வாய் கிரகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் 2018இல் நாசா இன்சைட் லேண்டர் விண்கலம் பூமியிலிருந்து அனுப்பப்பட்டது. இந்த லேண்டர் விண்கலம், நவ-26, 2018இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அன்று முதல் 4 ஆண்டுகளாக லேண்டர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் தன்மை நிலை மற்றும் நிலப்பரப்பு குறித்து ஆய்வு செய்கிறது.
இன்சைட் லேண்டர் விண்கலம், தனது மிஷனின் கடைசி கட்டத்தில் இருப்பதாக நாசா இன்சைட், தெரிவித்துள்ளது. இன்சைட் லேண்டரின் படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, லேண்டரின் சக்தி(Power) குறைந்து விட்டது, இது தனது கடைசி படமாக இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளது.
மேலும் என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்: இங்கு எனது நேரம் பயனுள்ளதாகவும் அமைதியாகவும் இருந்தது. நான் விரைவில் இங்கிருந்து மிஷனை முடித்து கொண்டு கிளம்புவேன் என்று பதிவிட்டு தனது ட்வீட்டை வெளியிட்டுள்ளது. லேண்டர் விண்கலம், நான்கு ஆண்டுகளில் சேகரித்த தகவல்கள் பாதுகாப்பாக இருப்பதாக மேலும் கூறியது.