நட்சத்திரங்கள் தொடர்பான மர்மங்களுக்குத் தீர்வுகாணக்கூடிய புதிய கட்டமைப்பு!
6 மார்கழி 2022 செவ்வாய் 12:50 | பார்வைகள் : 6887
ஆஸ்திரேலியாவில் இன்று விரிவான Antenna என்றழைக்கப்படும் வானலைவாங்கிகளுக்கான கட்டமைப்பு கட்டப்படுவதற்கான பணிகள் தொடங்குகின்றன.
அந்தக் கட்டமைப்பு உலகின் மிகவும் சக்திவாய்ந்த வானலைத் தொலைநோக்கிகளில் ஒன்றாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டமைப்பைக் கட்டி முடித்தபின் அது தென்னாப்பிரிக்காவிலுள்ள வானலைவாங்கிகளுடன் இணைந்து Square Kilometre Array என்றழைக்கப்படும் மாபெரும் சாதனமாக அமையும் என்று கூறப்படுகிறது.
அதன்மூலம் நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாயின, விண்ணுலகில் வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா போன்ற விண்ணுலக மர்மங்களுக்குத் தீர்வுகாணலாம் என்று நம்பப்படுகிறது.
மாபெரும் தொலைநோக்கியை உருவாக்குவதற்கான யோசனை 1990களில் முதன்முதலில் தோன்றியது... ஆனால் அந்த யோசனை நீண்டகாலமாக பணம், இருதரப்பு உறவுகள் போன்றவற்றின் அடிப்படையிலான பிரச்சினைகளால் இதுவரை நிறைவேறாமல் போனது.
ஆஸ்திரேலியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் பெரிய பரப்பளவில் யாரும் தங்காத நிலம் இருப்பதாலும், அத்தகைய நிலத்தில் வானலைச் செயல்பாடுகள் இல்லாததாலும் இரு நாடுகளும் இணைந்து அத்திட்டத்தை நிறைவேற்ற முனைகின்றன.