Paristamil Navigation Paristamil advert login

பிளாக்ஹோலின் தீவிர வெடிப்பு - பூமியை நோக்கி வந்த மர்மம்

 பிளாக்ஹோலின் தீவிர வெடிப்பு - பூமியை நோக்கி வந்த மர்மம்

4 மார்கழி 2022 ஞாயிறு 13:06 | பார்வைகள் : 6752


பூமியை நோக்கி வந்த மர்மமான ஒளியானது ப்ளாக்ஹோலின் தீவிர வெடிப்பிலிருந்து வந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 
விண்வெளில் உருவாகியுள்ள ப்ளாக்ஹோல் தனக்கு அருகில் வரும் நட்சத்திரங்களை உட்கொள்ளும்பொழுது ஏற்பட்ட தீவிர வெடிப்பால் இந்த ஒளியானது ஏற்பட்டது எனவும் இது நேரடியாக பூமியை நோக்கி வந்தது என்றும் வானியல் ஆராச்சியாளர்கள் கூறியுள்ளனர். 
 
நட்சத்திரங்களானது ப்ளாக்ஹோலால் சிறு துண்டுகளாக உடைக்கப்படும் நிகழ்வானது TDE அல்லது டைடெல் சீர்குலைவு என்று அழைக்கப்படும்.
 
மேலும் இதுபோன்று நடக்கும் சில நிகழ்வுகளில் 1 சதவீத நிகழ்வுகளில் மட்டும் பிளாக் ஹோலானது தனது ஓவ்வொரு பக்கங்களில் இருந்தும் பிளாஸ்மா கதிர்வீச்சுகளை வெளிவிடும் இந்த நிகழ்வானது jetted-TDE என்றும் அழைக்கப்படுகிறது.
 
மேலும் இது எவ்வாறு நிகழ்கிறது என்று வானியல் ஆராச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்