Paristamil Navigation Paristamil advert login

பூமியைத் தாண்டிப் பிற கிரகங்களில் உயிரினங்களால் உயிர்வாழ முடியுமா?

பூமியைத் தாண்டிப் பிற கிரகங்களில் உயிரினங்களால் உயிர்வாழ முடியுமா?

27 ஐப்பசி 2022 வியாழன் 08:07 | பார்வைகள் : 6382


பொதுவாகப் பூமிப்பந்தைப் போல அமைந்துள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. அதுகுறித்து ஆய்வொன்று நடத்தப்பட்டது. 

 
அந்த ஆய்வை நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அவர்களின் ஊகத்தை வெளியிட்டனர். 
 
பிரபஞ்சத்திலுள்ள மிகவும் பொதுவான வகையான நட்சத்திரம் - M dwarf என்று அழைக்கப்படுகிறது. 
 
அதற்கு அருகிலுள்ள atmosphere எனும் வளிமண்டலம் கொண்ட கிரகங்களில் கரிமவாயு இருக்கும் சாத்தியம் உள்ளது என்பதும் அவற்றில் உயிரினங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது என்பதும் விஞ்ஞானிகளின் ஊகம். 
 
இருப்பினும், ஆய்வில் ஆராயப்பட்ட M Dwarf கிரகமான GJ 1252bஇல் பூமியைவிட 700 மடங்கு அதிகமான கரிமவாயு உள்ளது. 
 
அந்தக் கிரகத்தில் இன்னமும் வளிமண்டலம் அமையவில்லை என்பதை ஆய்வாளர்கள் சுட்டினர். 
 
அதில் மதியவேளைகளில் சராசரியாக 1,228 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகிறது. 
 
அதைத் தவிர்த்து மேலும் பல கிரகங்களில் உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கான சரியான சுற்றுப்புறம் இருக்கிறதா என்னும் தேடல் தொடர்கிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்