வானில் பறக்கும் அடையாளம் தெரியாத மர்ம விமானங்கள் - கண்டறிய முனையும் NASA
26 ஐப்பசி 2022 புதன் 12:02 | பார்வைகள் : 11382
NASA எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், வானில் பறக்கும் UFO (Unidentified Flying Object) என்ற அடையாளம் தெரியாத பொருள்களைப் பற்றி ஆராயப் புதிய குழு ஒன்றை அமைத்துள்ளது.
அவை வேற்றுலகத்திலிருந்து வருகின்றன என்று பரவலாக நம்பப்படுகிறது.
16 உறுப்பினர்கள் கொண்ட அந்தக் குழு முழுக்க முழுக்க, அடையாளம் தெரியாத அந்தப் பொருள்கள்மீது கவனத்தைச் செலுத்தும்.
வர்த்தகத் துறைப் பிரிவுகள், அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு அந்தக் குழு ஆய்வுகளை நடத்தும்.
அடையாளம் தெரியாத பொருள்கள் குறித்து அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு நடத்தும் விசாரணைக்கு அப்பாற்பட்டது NASAவின் ஆய்வு.
பல ஆண்டுகளாக இரு தரப்பினரும் அடையாளம் தெரியாத பொருள்கள் இல்லை என்று கூறிவந்தன. இப்போதோ, அதற்கு நேர்மாறாக, அடையாளம் தெரியாத பொருள்கள் குறித்து விசாரணைகளும் ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன.


























Bons Plans
Annuaire
Scan