சிறுகோள் மீது விண்கலத்தை மோத செய்து நாசா சாதனை
2 ஐப்பசி 2022 ஞாயிறு 04:39 | பார்வைகள் : 10085
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க 'கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (பிடிசிஓ)' ஒன்றை நிறுவி உள்ளது.
இந்த அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த விண்கலம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை கண்டுபிடித்தது. இந்த டிடிமோஸ் பைனரி சிறுகோளை பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசைதிருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த வகையில் நாசாவால் ஏவப்பட்ட அந்த விண்கலம் பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட சிறுகோள் மீது நேற்று வெற்றிகரமாக மோதப்பட்டது. இதன் மூலம் அந்த சிறுகோளின் பாதை பூமியில் இருந்து திசைதிருப்பப்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுகோளால் பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டது.
சிறுகோள் மீது விண்கலம் மோதும் வீடியோவை நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பியது.
விண்கலம் வெற்றிகரமாக சிறுகோள் மீது மோதிய நிலையில் அந்த கோளின் பயண திசை விரைவில் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan