Paristamil Navigation Paristamil advert login

விண்வெளியில் அரிசி விளைவித்து சாதனை படைத்துள்ள சீன விஞ்ஞானிகள்

விண்வெளியில் அரிசி விளைவித்து சாதனை படைத்துள்ள சீன விஞ்ஞானிகள்

1 புரட்டாசி 2022 வியாழன் 13:02 | பார்வைகள் : 5919


சீன விண்வெளி நிலையத்தில் பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
 
கட்டுமான பணி நிறைவடையாத சீன விண்வெளி நிலையத்தில், பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட வென்சியான் ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிர்களை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.
 
இதற்கான பணிகள் கடந்த ஜூலையில் தொடங்கிய நிலையில், இதற்காக தாலே கிரஸ் மற்றும் அரிசி வகை செடிகளின் விதைகள் பயன்படுத்தப்பட்டன.
 
இதில், தாலே கிரேஸ் என்ற முட்டைக்கோஸ் வகையைச் சேர்ந்த விதை 4 இலைகளை உற்பத்தி செய்தது. அரிசி விதையானது 30 சென்டி மீட்டர் உயரத்திற்கு வளர்ந்து விஞ்ஞானிகளை ஆச்சரியமடைய செய்துள்ளது

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்