நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பின்னடைவு
30 ஆவணி 2022 செவ்வாய் 14:40 | பார்வைகள் : 5682
நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் ஆர்ட்டெமிஸ்- திட்டம் தற்காலிகாலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது ‘அப்போலோ’திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை கடந்த 1969 ஆம் ஆண்டு அனுப்பி சாதனை படைத்தது. அதன் பின், தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைக்க ஆர்ட்டெமிஸ்- திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில் ஆர்ட்டெமிஸ்- நேற்று நிலவுக்கு அனுப்பி வைக்கப்பட இருந்தது. ஆனால், இந்த விண்கலம் மனிதர்களை ஏற்றிச் செல்லவில்லை. வருங்காலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்கான அடித்தளம், உயிரியல் பரிசோதனை முயற்சியாக அனுப்பி வைக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.
Biology experiment - 1 என்றழைக்கப்படும் இந்த நீண்ட தூர விண்வெளிப் பயணத்தில் 4 வெவ்வேறு உயிரியல் மாதிரிகள், சோதனைகள் செய்யப்பட உள்ளன என்று நாசா கூறியுள்ளது.
இந்நிலையில், எரிபொருள் நிரப்பும் போது கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து ஆர்ட்டெமிஸ் விண்கலம்- ஏவும் பணி நிறுத்தப்பட்டது.
விண்வெளி ஓடத்தின் 3வது இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால், 50 ஆண்டுகளுக்கு பின்பு நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.