ஏலியன்களால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலா? அரசாங்கத்துடன் கைகோர்க்கும் NASA
31 வைகாசி 2022 செவ்வாய் 18:22 | பார்வைகள் : 11914
பல ஆண்டு காலமாகவே விஞ்ஞானிகள் பூமியை தவிர்த்து மற்ற கிரகங்களில் உயிரினங்கள் எதுவும் வாழ்கின்றதா என்று தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏலியன்கள் இருப்பதாக அடிக்கடி சில செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. சில இடங்களில் UFO எனப்படும் பறக்கும் தட்டை பார்த்ததாகவும் பல செய்திகள் இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கிறது. இது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஏலியன்கள் பற்றி ஆய்வுகளை செய்துகொண்டே தான் இருக்கின்றனர்.
இந்நிலையில், UFO-க்களைத் தேடும் பணியில் அமெரிக்க அரசாங்கக் குழுவுடன் இணைவதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. UFOக்களை பார்த்ததாக 400 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இது பற்றிய ஆராய்ச்சியில் நாசாவும் அமெரிக்க அரசும் இணைந்து பணியாற்ற உள்ளது
நாடு முழுவதும் சுற்றிவரும் யுஎஃப்ஒக்களால் ஏற்படக்கூடிய "அச்சுறுத்தல்கள்" குறித்து கவலை தெரிவித்துள்ள நாசா, அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக நாசா சமீபத்தில் உறுதி செய்துள்ளது. யுஎப்ஒக்களை தேடும் பணியில் ஈடுபடும் என்று கூறியது.
இதன் கீழ், NASA இப்போது US UFO விசாரணைக்கு உதவும். நாசா செய்தித் தொடர்பாளர், "அடையாளம் தெரியாத வான்வழி நிகழ்வுகள் (UAP) பற்றிய புரிதலை மேம்படுத்த இது செயல்படும் என்றார்.
இப்போது நாசா விண்வெளி அடிப்படையிலான நிபுணத்துவத்தை மேலும் மதிப்பீடு செய்து ஆராய்ச்சி செய்யும். இந்த விவகாரத்தில் பல அரசு நிறுவனங்களுடன் நாசா ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிக்கையில், நாசா தனது UAP அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுகிறது என்று கூறப்பட்டுள்ளதை மறுத்துள்ளது. 54 ஆண்டுகளில், UAP கள் பற்றிய வரலாற்று சிறப்பு மிக்க அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்கு வாரங்களுக்குப் பிறகு நாசா - அமெரிக்க அரசின் கூட்டு மிஷன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக UFO தோன்றிய சம்பவங்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
AOIMSG என்பது ஏர்போர்ன் ஆப்ஜெக்ட் ஐடென்டிஃபிகேஷன் அண்ட் மேனேஜ்மென்ட் சின்க்ரோனைசேஷன் குரூப் என்பதைக் குறிக்கிறது. இது UFO டாஸ்க் ஃபோர்ஸின் அதிகாரப்பூர்வ பெயராகும். நாசாவின் பணிக்கு பாதுகாப்புத் துறையின் யுஏபி பணிக்குழு ஆதரவு அளிக்கும் என்று ஆதாரம் கூறியது. அமெரிக்க வான்பரப்பிற்குள்ளும் வெளியேயும் விசித்திரமான பொருட்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை, யுஏபி பணிக்குழு விசாரணை செய்ததாக அமெரிக்க நாடாளுமன்றம் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மாத தொடக்கத்தில் நடந்த விசாரணையின் போது, கடற்படை உளவுத்துறை அதிகாரி ஒருவர், 400 க்கும் மேற்பட்ட UAP களைப் பார்த்துள்ளதாகத் தெரிவித்தார். விசாரணையின் போது, காங்கிரஸ்காரர்களுக்கு யுஎஃப்ஒ குறித்த வீடியோக்களும் காண்பிக்கப்பட்டன.