SVS 13 பைனரி நட்சத்திர கூட்டத்தைச் சுற்றி 3 கிரக அமைப்புகளின் உருவாக்கம் கண்டுபிடிப்பு!
26 பங்குனி 2022 சனி 12:02 | பார்வைகள் : 10389
SVS 13 எனப்படும் பைனரி நட்சத்திர அமைப்பைச் சுற்றி மூன்று கிரக அமைப்புகளின் உருவாக்கத்தை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
980 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள பைனரி நட்சத்திர அமைப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள தூசியின் சிக்கலான கட்டமைப்புகள் இந்த கண்கவர் சூழலில் கிரக அமைப்புகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதை தெளிவாகக் காட்டுகின்றன.
இந்த ஆராய்ச்சியை தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் (he Astrophysical Journal) என்ற விஞ்ஞான சஞ்சிகை ஏற்றுக்கொண்டது. இந்த ஆய்வுக் கட்டுரை, பதிப்பிற்கு முந்திய கட்டுரையாக (preprint server) arXiv சர்ர்வரில் கிடைக்கிறது.
மூன்று தசாப்த கால ஆய்வுகளை ஒன்றிணைத்து, சர்வதேச விஞ்ஞானிகள் குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது. ஒரு ஜோடி நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சுற்றி வருவதை அவதானித்துள்ள விஞ்ஞானிகளின் குழு,, இந்த நட்சத்திரங்கள் வாயு மற்றும் தூசிகளால் சூழப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
மிகப் பெரிய வரிசை (VLA) மற்றும் அட்டகாமா பெரிய மில்லிமீட்டர்/சப்மில்லிமீட்டர் வரிசை (ALMA) ஆகியவற்றைப் பயன்படுத்தி, விஞ்ஞானக் குழு பைனரி நட்சத்திரமான SVS 13 என்ற பைனரி நட்டத்திர அமைப்பை, அதன் கரு நிலையில் ஆய்வு செய்துள்ளது. உருவாக்கத்தில் உள்ள பைனரி அமைப்பில் இதுவரை கிடைத்த சிறந்த விளக்கத்தை இந்த ஆய்வு வழங்கியுள்ளது.
கிரகங்கள் உருவாகும் மாதிரிகள், நட்சத்திரங்களை உருவாக்கும் புரோட்டோபிளானட்டரி வட்டுகளில் பனி மற்றும் தூசி துகள்கள் மெதுவாக திரட்டப்படுவதன் மூலம் கிரகங்கள் உருவாகின்றன. பொதுவாக இந்த மாதிரிகள் சூரியன் போன்ற ஒற்றை நட்சத்திரங்களை மட்டுமே உருவாக்கும் என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது.
இருப்பினும், பெரும்பாலான நட்சத்திரங்கள் பைனரி அமைப்புகளை உருவாக்குகின்றன, இதில் இரண்டு நட்சத்திரங்கள் ஒரு பொதுவான மையத்தைச் சுற்றி சுழலும். இந்த முக்கியமான இரட்டை நட்சத்திர அமைப்புகளைச் சுற்றி கிரகங்கள் எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றிய அதிக தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.
ஆனால், இது குறித்த ஆராய்ச்சிக்கு இரண்டு நட்சத்திரங்களுக்கிடையேயான ஈர்ப்பு தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
"ஒவ்வொரு நட்சத்திரமும் அதைச் சுற்றி வாயு மற்றும் தூசி நிறைந்த வட்டு இருப்பதையும், கூடுதலாக, இரண்டு நட்சத்திரங்களையும் சுற்றி ஒரு பெரிய வட்டு உருவாகிறது என்பதையும் எங்கள் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன" என்று IAA-CSIC மற்றும் UK இன் ஆராய்ச்சியாளர் அனா கார்லா டியாஸ்-ரோட்ரிக்ஸ் கூறுகிறார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உள்ள ALMA பிராந்திய மையம் (UK-ARC), இந்த ஆய்வுப் பணியை வழிநடத்துகிறது.
"இந்த வெளிப்புற வட்டு ஒரு சுழல் அமைப்பைக் காட்டுகிறது, இது தனிப்பட்ட வட்டுகளில் பொருளை ஊட்டுகிறது, மேலும் அவை அனைத்திலும் எதிர்காலத்தில் கிரக அமைப்புகள் உருவாகலாம். இரு நட்சத்திரங்களையும் சுற்றி வட்டுகள் இருப்பதற்கும் பைனரி அமைப்பில் பொதுவான வட்டு இருப்பதற்கும் இது தெளிவான சான்றாகும்.
பைனரி அமைப்பு SVS 13 சூரியனைப் போன்ற மொத்த நிறை கொண்ட இரண்டு நட்சத்திரக் கருக்களைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பில் உள்ள இரண்டு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக உள்ளன, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட தொண்ணூறு மடங்கு தூரம் மட்டுமே உள்ளது.
அமைப்பில் உள்ள வாயு, தூசி மற்றும் அயனியாக்கம் செய்யப்பட்ட பொருட்களின் கலவையைப் தெரிந்துக் கொள்வதை, இந்த ஆய்வு சாத்தியமாக்கியுள்ளது. கூடுதலாக, இரண்டு புரோட்டோஸ்டார்களைச் சுற்றியும் கிட்டத்தட்ட 30 வெவ்வேறு மூலக்கூறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன,
இதில் 13 சிக்கலான கரிம மூலக்கூறுகள் ஆகும், அவற்றில் 7 இந்த அமைப்பில் முதல் முறையாக கண்டறியப்பட்டது.
"இந்த இரண்டு சூரியன்களைச் சுற்றி கிரகங்கள் உருவாகத் தொடங்கும் போது, வாழ்க்கையின் கட்டுமானத் தொகுதிகள் இருக்கும்" என்று அனா கார்லா டியாஸ்-ரோட்ரிக்ஸ் கூறுகிறார்.
விஞ்ஞானக் குழு, முப்பது வருடங்களாக VLA ஆல் பெறப்பட்ட SVS 13 இன் அவதானிப்புகளையும், ALMA இலிருந்து புதிய தரவுகளையும் சேர்த்து, இந்த காலகட்டத்தில் இரு நட்சத்திரங்களின் இயக்கத்தில் இருப்பதை உறுதி செய்தது.
அவற்றின் சுற்றுப்பாதையைக் கண்டறிந்ததுடன், புரோட்டோஸ்டார்களின் நிறை, வட்டுகளின் நிறை மற்றும் அவற்றின் வெப்பநிலை போன்ற பல அடிப்படை அளவுருக்களுடன் அமைப்பின் வடிவவியல் மற்றும் நோக்குநிலையும் அறியப்பட்டது..
"இளம் நட்சத்திரங்களின் அமைப்பு மற்றும் பண்புகளைப் பற்றிய குறிப்பிடத்தக்க விரிவான பார்வையை எவ்வளவு கவனமாக, முறையான ஆய்வுகள் வழங்க முடியும் என்பதை இந்த வேலை காட்டுகிறது" என்று இந்த ஆய்வுப் பணிக்கு ஆதரவு வழங்கும் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் கருதுகிறது.