Paristamil Navigation Paristamil advert login

வரலாற்றில் முதன்முறையாக நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு

வரலாற்றில் முதன்முறையாக நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு

10 தை 2022 திங்கள் 15:42 | பார்வைகள் : 9836


நிலவில் தரை பரப்பில் உள்ள பாறை படிவங்களில் ஒரு டன்னுக்கு 120 கிராம் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 
சந்திரனின் நிலப்பரப்பில் அதிக ஈரப்பதத்துக்கு சூரிய காற்று காரணமாகும். அது தான் தண்ணீரை உருவாக்கும் ஹைட்ரஜனை கொண்டு வந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 
நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5 என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது.
 
இந்த விண்கலம் நிலவில் மத்திய உயர் அட்சய ரேகை பகுதியில் தரை இறங்கியது.
 
பின்னர் 1,731 கிராம் எடை கொண்ட பாறை மாதிரிகளுடன் அந்த விண்கலம் பூமிக்கு திரும்பியது.
 
அந்த பாறை மாதிரியை சீனாவை சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.
 
அந்த ஆய்வின் போது, நிலவில் முதல் முறையாக தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்