ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள் - எரிமலை வெடிக்கு அபாயம்!
6 ஆடி 2023 வியாழன் 07:39 | பார்வைகள் : 6796
ஐஸ்லாந்தில் ரெய்க்ஜேன்ஸ் என்ற பகுதியில் நேற்று 1600 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது.
இந்த அதிர்வுகள் ரிக்டர் 4 அளவில் பதிவாகியுள்ளது.
இது சாதாரண ஒரு அதிர்வாக இருந்தாலும் வானத்தில் விமானங்கள் செல்வதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை எரிமலை வெடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும், ஒரு சில நாட்களில் வெடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது ஏற்பட்டுள்ள நிலஅதிர்வுகளின் அளவின் அடிப்படையில், 2021 மற்றும் 2023 இல் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளை விட பெரியதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் பற்றி எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.