சூரியன் இருளைக் கொண்டுவந்த நாள்
28 ஆனி 2023 புதன் 12:24 | பார்வைகள் : 7201
1989ஆம் ஆண்டு, கனடாவின் கியூபெக் மாகாணம் திடீரென இருளில் மூழ்கியது. அதை சூரியன் இருளைக் கொண்டுவந்த நாள் என அழைக்கிறார்கள்.
மின்தடை காரணமாக எட்டு மணி நேரம் இருளில் தவித்த கியூபெக் மக்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
உண்மையில், அந்த மின்தடைக்கு காரணமாக இருந்தது, சூரிய புயல் என்னும் நிகழ்வு ஆகும்.
அந்த சூரிய புயல், கியூபெக்கின் நீர் மின் நிலையத்தை பாதித்ததாலேயே மின் தடை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் பூமிக்கு பல பிரச்சினைகள் ஏற்பட இருப்பதாக எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
அதாவது, சூரியனின் செயல்திறன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
11 ஆண்டுகளுக்கொருமுறை சூரியனின் செயல்திறன் அதிகரிக்கும் அல்லது குறையும். சூரியனின் செயல்திறன் அதிகரிப்பதை சூரிய உச்சம் என்கிறோம்.
நாம் இப்போது இந்த சூரிய உச்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். 2025இல் அது நடக்கும் என முன்பு நிபுணர்கள் கணித்திருந்தார்கள்.
ஆனால், சூரியன் செயல்படும் விதம், எதிர்பார்த்ததைவிட சூரிய உச்சம் விரைவில் நிகழ்ந்துவிடலாம் என எண்ண வைத்துள்ளது.
அதாவது, இந்த ஆண்டின் இறுதியிலேயே அது நடைபெறலாம்.
சூரிய உச்சத்தின்போது, சூரியனின் காந்தப்புலம் மிகவும் பலவீனமடையும். அது பூமிக்கு நல்லதல்ல.
பொதுவாக, சூரிய காந்தப்புலம் ஒரு பாதுகாப்புக் கவசம் போல செயல்படும்.
சூரியனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்களை அது தடுப்பதுடன், சூரியப் புயல் போன்ற மோசமான விளைவுகளையும் அது குறைக்கும்.
இது போன்றதொரு நிகழ்வுதான் கனடாவின் கியூபெக்கில் மின்தடைக்குக் காரணமாக அமைந்தது.
தற்போது இந்த ஆண்டு இறுதியில் சூரிய உச்சம் நிகழலாம் என கருதப்படுவதால், அது தொலைக்கட்டுப்பாடுகளை பாதிக்கலாம் என்றும், சேட்டிலைட்டுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.