அழியத் தொடங்கும் பூமி.. நாசா விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்
25 வைகாசி 2023 வியாழன் 10:49 | பார்வைகள் : 8818
உலகம் அழியப்போகிறது என அடிக்கடி வதந்திகள் வெளியாகி மக்களை அச்சமடைய செய்துவருகின்றன.
குறிப்பாக வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் இத்தகைய தகவல்கள் பரவிவருகின்றன.
சிலர் முக்காலத்தை உணர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு எதிர்காலத்தை கணித்து சொல்லி வருகின்றனர்.
ஆனால் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இத்தகைய எச்சரிக்கையை விடுக்கும்போதுதான் மக்கள் பீதியடைகின்றனர்.
நாசா விண்வெளியை துல்லியமாக கணித்து வருகிறது. எந்த கிரகம் நகர்கிறது.
எந்த பாறை பூமிக்கு அருகில் வருகிறது என அனைத்து விஷயங்களையும் தெளிவாக கணித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில் நாசா வெளியிட்ட புதிய அறிவிப்பு மக்களின் இதயதுடிப்பை அதிகரித்துள்ளது.
நாசாவின் கூற்றுப்படி பூமியின் அழிவுக்கு விண்வெளியில் ஏற்படும் அழிவுகள் காரணமாக இருக்கும்.
விண்வெளியில் உருவாகும் புயல் பூமியை தாக்கும்.
இந்த சூரிய புயலால் பூமியில் தீப்பிழம்புகள் உருவாகும்.
இதிலிருந்து மனிதர்கள் தப்பிக்க கூட வாய்ப்பில்லை, அரை மணி நேரத்தில் பூமி அழியத் தொடங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இதிலிருந்து தப்பிக்க ஆர்டிஃபீசியல் இண்டலிஜெண்ட் எனப்படும் AI உதவியுடன் இதற்கான முன்னெடுப்புகளை நாசா செய்யவுள்ளது.
அதாவது விண்வெளியில் புயல் உருவானால் அது பூமிக்கு உடனடியாக தகவல் சொல்லும் விதமாக புதிய தொழில்நுட்பத்தை நாசா உருவாக்கி வருகிறது.
பொதுவாக விண்வெளியில் புயல் உருவானால், செயற்கைகோள்களிலிருந்து சிக்னல்கள் அனுப்பப்படுவது தடைபடும்.
தற்போது AI உதவியுடன் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.