Paristamil Navigation Paristamil advert login

பேரழிவை சந்திக்கும் உலகம்

பேரழிவை சந்திக்கும் உலகம்

15 வைகாசி 2023 திங்கள் 10:35 | பார்வைகள் : 9448


கொலை செய்யவே வடிவமைக்கப்படும் ரோபோக்கள், ஏலியன்கள், சிறுகோள்கள் மற்றும் இன்னொரு தொற்றுநோய் காரணமாக உலகம் மொத்தமாக பேரழிவை சந்திக்கும் என நிபுணர்கள் தரப்பால் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
மேலும், டூம்ஸ்டே கடிகாரம் மிக நெருக்கமாக நகர்வதையும் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர்கள், மனிதகுலத்தின் தொடர்ச்சியான இருப்பு அதிக ஆபத்தில் உள்ளது என்று எச்சரிக்கின்றனர்.
 
மட்டுமின்றி, டூம்ஸ்டே கடிகாரம் விடுத்த எச்சரிக்கையில் ஒன்று தான் ஓராண்டுக்கு பின்னரும் நீடிக்கும் உக்ரைன் போர் என்கிறார்கள் நிபுணர்கள். 
 
டைனோசர்கள் மொத்தமாக அழிய காரணமான சிறுகோள் ஒன்றின் வீழ்ச்சி, மனித குலத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என கணித்துள்ளனர்.
 
ஒவ்வொரு 100 மில்லியன் ஆண்டுகளுக்கும் ஒருமுறை இப்படியான சிறுகோள் ஒன்று பூமியில் பதிப்பதாகவும், தற்போதைய மெக்ஸிகோ வளைகுடாவில் அப்படியான ஒரு சிறுகோள் விழுந்து மாபெரும் சுனாமி ஏற்பட்டு,
 
கரும்புகை மற்றும் தூசால் மேகமூட்டம் உருவாகி, அதனால் உலகளாவிய காலநிலை மாற்றம் ஏற்பட்டு பூமியின் 75 சதவீத விலங்கு மற்றும் தாவர இனங்களை அழிந்து போய்விட்டது.
 
இப்படியான சூழல் அடுத்த 30 மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட இருப்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 
 
இன்னொன்று கொலையாளியாகும் ரோபோக்கள். தற்போதைய அறிவியல் வளர்ச்சியில் அது சாத்தியமாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறுகின்றனர்.
 
மாபெரும் எரிமலை வெடிப்பும் மனித குலத்தை மொத்தமாக அழிக்கும் ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. 
 
அவை சுமார் 100,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றன.
 
ஏலியன்களால் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தல் உருவாகலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர் நிபுணர்கள்.
 
 மேலும், மனித குலத்திற்கு இன்னொரு அச்சுறுத்தலாக பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், கொரோனா பெருந்தொற்றால் உலகமெங்கும் 20 மில்லியன் மரணங்கள் ஏற்பட்டுள்ளதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்