Paristamil Navigation Paristamil advert login

பூமியில் விழ இருக்கும் 1000 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்

பூமியில் விழ இருக்கும் 1000 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்

10 வைகாசி 2023 புதன் 12:29 | பார்வைகள் : 8276


ஐரோப்பாவின் ஏயோலஸ் செயற்கைக் கோள் 320 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றி வரும் நிலையில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் அதன் ஆயுட்காலம் நிறைவடைய உள்ளது.
 
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 1360 கிலோ எடையுள்ள ஐரோப்பாவின் ஏயோலஸ் செயற்கைக் கோள் விண்வெளிக்கு ஏவப்பட்டது.
 
 இந்தநிலையில் விண்கலம் அதன் ஆய்வை முடித்த நிலையிலும் எரிபொருள் தீர்ந்துவிட்டதாலும் அதன் ஆயுட்காலம் முடிந்து மீண்டும் பூமிக்கு திரும்ப உள்ளது.
 
பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து தரையிறங்க உள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) எர்த் எக்ஸ்ப்ளோரர் ஆராய்ச்சி பணிக்காக ஏயோலஸ் விண்கலத்தை அனுப்பியது. இந்தநிலையில், செயற்கைக் கோளின் லேசர் இன்னும் செயல்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
 
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி இதுகுறித்து கூறுகையில், ” ஏயோலல் விண்கலம் கடந்த ஏப்ரல் 30-ம் திகதி அதன் அறிவியல் செயல்பாட்டை நிறுத்தியது.
 
இன்னும் சில நாட்களில் செயற்கைக் கோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து தரையிறங்கும். தற்போது விண்கலம் பூமியில் இருந்து 320 கி.மீ தூரத்தில் சுற்றி வருகிறது. 
 
இது 280 கிமீ, 150 கிமீ என படிப்படியாகக் குறைக்கப்படும். 80 கிலோமீட்டர் தூரம் வரை குறைக்கும் போது பூமியில் விழுந்து எரிந்து விடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 
பாதுகாப்பான தரையிறக்கத்திற்கு தேவையான நடவடிக்கைள் எடுக்கப்படும். மனிதர்கள், விலங்குகள் என யாருக்கும் தீங்கு ஏற்படாத படி தரையிறக்கப்படும். எப்போது விண்கலம் தரையிறக்கப்படும் என வரும் நாட்களில் தெரிவிக்கப்படும்.
 
ஜூன் மாதத்தில் இதற்கான விவரங்கள் கொடுக்கப்படும். ஆனால் ஆகஸ்ட் இறுதிக்குள் ஏயோலஸ் தரையிறக்கப்படும். 
 
கடலோரப் பகுதியில் விண்கலம் தரையிறக்கப்படும். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது” என ஏயோலஸ் மிஷன் மேலாளர் டோமசோ பர்ரினெல்லோ கூறினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்